ஒரு சின்ன ரூம் ரூ.5.7 கோடி. புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்கி குவிப்பது ஏன் தெரியுமா

  • துபாய்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் வீடு வாங்குவது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. கோடிகளில் புரளும் இந்த புர்ஜ் கலீபாவில் சிறிய வீடு முதல் பங்களா வரை எந்தளவுக்கு ரேட்டில் விற்பனையாகிறது. அங்கு எந்தப் பணக்காரர்கள் எல்லாம் வீட்டை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகி, நெட்டிசன்கள் வாய் பிளக்க வைத்துள்ள புதிய ரியாலிட்டி தொடர் தான் 'தேசி பிளிங்' (Desi Bling). சொகுசு கார்கள், பிரம்மாண்ட பார்ட்டிகள், கோடிக்கணக்கிலான நகைகள் என துபாயில் குடியேறியுள்ள இந்தியப் பணக்காரர்களின் வாழ்க்கையை இந்தத் தொடர் கண்முன்னே நிறுத்துகிறது.

    Advertisement

    புர்ஜ் கலீபா

    துபாயின் ஐகானாக இருப்பது புர்ஜ் கலீபா. உலகின் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலீபாவை சுற்றி பார்க்கவே பெரிய தொகை செலவாகும்போது, அங்குத் தங்க எவ்வளவு செலவாகும். ஆனாலும், அங்குத் தங்கப் பணக்காரர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.. "நான் துபாயில் இருக்கிறேன்" என்று சொல்வதற்கும், "நான் புர்ஜ் கலீபாவில் வசிக்கிறேன்" என்று சொல்வதற்கும் மிக பெரிய ஸ்டேட்டஸ் வித்தியாசமே உள்ளது. இதுவே பணக்காரர்களை புர்ஜ் கலீபா நோக்கித் தள்ளுகிறது.

    எவ்வளவு?

    அந்தச் சொகுசு கட்டிடமான புர்ஜ் கலீபாவில் விலை விவரம் குறித்து பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிராப்பர்ட்டி ஃபைண்டர் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. புர்ஜ் கலீபாவின் வீடுகளுக்கான கட்டணம் என்பது மாத வாடகை அல்ல, அது அந்த வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை விலை ஆகும். அங்கு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்ஸ் AED 1.5 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹3.4 கோடி முதல் ₹5.7 கோடி வரை இருக்கும். 1-பெட்ரூம் அபார்ட்மெண்ட்ஸ் AED 2.2 மில்லியன் முதல் 4 மில்லியன் வரை, அதாவது சுமார் ₹5 கோடி முதல் ₹9 கோடி வரை இருக்கும்.

    Advertisement

    2-பெட்ரூம் அபார்ட்மெண்ட்ஸ் விலை AED 4.4 மில்லியன் முதல் 7 மில்லியன் வரை (சுமார் ₹10 கோடி முதல் ₹16 கோடி வரை), 3-பெட்ரூம் லக்சரி யூனிட்டுகள் AED 8 மில்லியன் முதல் 20 மில்லியனுக்கும் மேல் எகிறுகிறது. பணம் எல்லாம் மேட்டரே இல்லை என்று சொல்லும் பெரும் பணக்காரர்களுக்கும் தனியாக ஒரு பிரிவு இருக்கிறது. அதுதான் பென்ட்ஹவுஸ் & அர்மானி குடியிருப்புகள். இதன் விலை AED 35 மில்லியன் முதல் 100 மில்லியனுக்கும் மேல் (தோராயமாக ₹80 கோடி முதல் ₹230 கோடியைத் தாண்டும்)!

    Advertisement

    இந்த விலைகள் அனைத்தும் துபாய் நிலப்பரிந்துரை கட்டணங்கள், ஏஜென்ட் கமிஷன்கள் மற்றும் ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள் சேர்க்கப்படாதது. இவை எல்லாம் சேர்த்தால் இன்னும் கூடுதலாக சில கோடிகள் ஏறும்.

    மிரள வைக்கும்

    துபாயின் இந்த முக்கியமான லக்சரி இடத்தில் வீடு வாங்கி, உலகின் உச்சியில் சொகுசு வாழ்க்கை வாழும் பிரபலங்கள் என பார்த்தால் அது நம்மை மிரள வைக்கும். பாலிவுட் பாட்சா ஷாருக் கான் அங்கு சொகுசு பங்களாவை வைத்திருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த கட்டிடத்தில் 29வது மாடியில் துபாய் ஃபவுண்டன் தெரியும் படியான ஒரு பவர்ஃபுல் 1-பெட்ரூம் அபார்ட்மெண்ட்டை தனது மனைவி சுசித்ராவின் பெயரில் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    பிரபலங்கள்

    சர்வதேசக் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் தனது மனைவியுடன் இணைந்து 2009லேயே புர்ஜ் கலீபாவில் ஒரு வீட்டை வாங்கித் தங்களின் சொத்துப் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தனது மனைவி பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு திருமணப் பரிசாக புர்ஜ் கலீபா வீட்டை அளித்தார். பின்னர் அவர்கள் அதை விற்றுவிட்டாலும், 'பணக்காரர்களின் மெகா கிப்ட்' பட்டியலில் இது இன்றும் முதலிடத்தில் உள்ளது. இத்தாலியின் உலகப் புகழ்பெற்ற பேஷன் டிசைனர் அர்மானி, இந்தக் கட்டிடத்திலுள்ள 'அர்மானி ஹோட்டலை' வடிவமைத்ததுடன், தனக்கென ஒரு பிரத்தியேக வீட்டையும் இங்கு வைத்துள்ளார்.

    English Summary

    A real estate report reveals apartment prices in Dubai's iconic Burj Khalifa, ranging from Rs 3.4 crore(மிரள வைக்கும் புர்ஜ் கலீபா விலை பட்டியல்ச): Burj Khalifa Apartment Prices latest news in tamil.