1947ல் அந்த ஒரு முடிவு மாறியிருந்தால்.. இன்று ஒட்டுமொத்த துபாயும் இந்தியாவின் ஒரு பகுதி!

  • துபாய்: இன்று ஐக்கிய அமீரகம் என்றாலே பலருக்கும் துபாய் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், வரலாறு கொஞ்சம் மாறியிருந்தால்.. இன்றைய துபாய் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சாம் டால்ரிம்பிள் இது தொடர்பான சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்று- ஐக்கிய அமீரகம். இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. அந்த அமீரகத்தின் முக்கிய நகராக இருக்கும் துபாய் ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக மாற இருந்தது உங்களுக்கு தெரியுமா. இந்திய வரலாற்றாசிரியர் சாம் டால்ரிம்பிள் தனது 'Shattered Lands' புத்தகத்தில் இந்த சுவாரஸ்யமான வரலாற்று தகவலை குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    பிரிட்டிஷ் இந்தியா

    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இன்றைய வளைகுடா நாடுகளின் சில பகுதிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அதை அவர்கள் நேரடியாக லண்டனில் இருந்து ஆட்சி செய்யவில்லை. மாறாக, அவை பிரிட்டிஷ் இந்திய பேரரசின் ஒரு பகுதியாக டெல்லியில் இருந்து நிர்வகிக்கப்பட்டதாக டால்ரிம்பிள் தெரிவித்துள்ளார். அடன் முதல் குவைத் வரையிலான அரேபிய பகுதிகள் இந்திய அரசின் நிர்வாக அமைப்புடன் தொடர்புடையதாக இருந்தன. அதாவது பிரிட்டனை சேர்ந்த இந்திய அரசியல் சேவை அதிகாரிகளே அதையும் நிர்வகித்தனர். இந்திய வீரர்களும் அப்பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Advertisement

    1889ஆம் ஆண்டின் Interpretation Actன் கீழ், இந்த பாதுகாப்பு நாடுகள் சட்டரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டதாகவும் டால்ரிம்பிள் கூறுகிறார். இது மட்டுமின்றி இந்தியாவுக்கும் வளைகுடா பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பு இதைவிட ஆழமானதாக இருந்ததாக டால்ரிம்பிள் சுட்டிக்காட்டுகிறார். அமீரக தலைநகரான அபுதாபி, பிரிட்டிஷ் இந்தியாவின் சமஸ்தானங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியல்களிலும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

    ஓமான்

    மேலும், பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்ட் கர்சன், ஓமானை இந்தியாவின் ஒரு சமஸ்தானத்தை போல நடத்த வேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்ததாக டால்ரிம்பிள் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இன்றைய ஏமன் நாட்டில் உள்ள அடனும் ஒரு காலத்தில் இந்தியாவுடன் நிர்வாக ரீதியாக இணைந்திருந்தது. அது பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்த முக்கிய துறைமுகமாகவும் செயல்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேலும், அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் வசித்தவர்களுக்கு 'இந்தியன் எம்பையர் பாஸ்போர்ட்' வழங்கப்பட்டன. இதன் காரணமாக தெற்கு ஏமனில் பிறந்த சிலருக்கும் இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்ட சம்பவங்கள் இருந்ததாக டால்ரிம்பிள் குறிப்பிட்டுள்ளார். பால்ஃபோர் பிரகடனத்துக்கு பிறகு ஜெருசலேமுக்கு குடிபெயர விரும்பிய தெற்கு ஏமனை சேர்ந்த ஒரு யூத பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    முக்கிய கேள்வி

    இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டன் தயாரானபோது, வளைகுடா பகுதிகளின் எதிர்காலம் குறித்த முக்கியமான கேள்வி எழுந்தது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பிறகு, வளைகுடா நாடுகளை யார் நிர்வகிப்பது? என்ற கேள்வி வந்த போது சுதந்திர இந்தியாவிடம் வளைகுடா பகுதிகளின் நிர்வாக பொறுப்பை ஒப்படைப்பது குறித்தும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆலோசித்ததாக டால்ரிம்பிள் கூறுகிறார்.

    Advertisement

    அப்போது உருவாக இருந்த இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் யாராவது பாரசீக வளைகுடா பகுதிகளை நிர்வகிக்க முடியுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த யோசனைக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. டெல்லியில் இருந்த இந்திய அதிகாரிகளுக்கே பாரசீக வளைகுடா குறித்து அதிக ஆர்வம் இல்லை என பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலர் ஆச்சரியம் தெரிவித்ததாகவும் டால்ரிம்பிள் கூறியுள்ளார்.

    மாறிய வரலாறு

    இறுதியில் வளைகுடா பகுதிகளின் எதிர்காலத்தை இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் சேர்த்து இல்லாமல்.. தனியாக அமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. 1947 ஏப்ரல் 1ஆம் தேதி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் கிடைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டன. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது வளைகுடா அரபு ஷேக் ஆட்சி பகுதிகள் அந்த வரைபடத்தில் இடம்பெறவில்லை.

    Advertisement

    பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களுடன் இருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டபோதும், துபாய், அபுதாபி உள்ளிட்ட அரபு ஷேக் ஆட்சி பகுதிகள் அதற்குள் வரவில்லை.

    ஆனால், ஒருவேளை 1947ல் பிரிட்டிஷ் நிர்வாகம் வளைகுடா பகுதிகளின் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைத்திருந்தால், இன்றைய மேற்கு ஆசியாவின் அரசியல் வரைபடமே முற்றிலும் வேறுபட்டிருக்கலாம். இன்று உலகின் மிக பெரிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் துபாய், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்!

    English Summary

    Historian Sam Dalrymple's book Shattered Lands highlights how parts of today's Gulf region were once administered through British India(இந்திய பகுதியில் ஒன்றாக மாறும் துபாய்): All things to know Dubai India.