இது ஆபத்தான பயங்கரவாத தாக்குதல்.. துபாய் - டெல்அவிவ் விமான சம்பவத்தில் UAE-யின் முதல் ரியாக்‌ஷன்

  • துபாய்: துபாய் - டெல்அவிவ் விமான கடத்தல் முயற்சியை ஆபத்தான பயங்கரவாத செயல் என்று 'ஃப்ளைதுபாய்' விமான நிறுவனம் செயல்பட்டு வரும் ஐக்கிய அரபு அமீரகம் முதல் முறையாக தெரிவித்துள்ளது. ''இது ஆபத்தான பயங்கரவாத செயல். பேரழிவு ஏற்பட இருந்த சமயத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் செயல்பாடு அனைத்து விதமான பாராட்டுகளுக்கும் தகுதியானது'' என்று ஐக்கிய அரபு அமீரக அதிபரின் தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் அன்வர் கார்கஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அதிபரின் தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் அன்வர் கார்கஷ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''ப்ளைதுபாய்' விமானத்தின் இந்திய விமானி ஸ்மித் மச்சார் எல்லாவித பாராட்டுகளுக்கும் தகுதியானவர். ஏனென்றால் ஒரு ஆபத்தான பயங்கரவாத செயலில் ஏற்படக்கூடிய பேரழிவை தடுப்பதற்காக அவர் தைரியமாகவும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டார்.

    Advertisement

    மிகவும் விரும்ப முடியாத சூழலிலும் கூட அவர் தனது தொழில்முறை தன்மையையும், தார்மீக பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டுள்ளார். இதுதான் அவரை ஹீரோவாக்கி உள்ளது. நடந்த சம்பவத்தை எளிதாக சுருக்கி விடவோ அல்லது சதி செயல்கள் என்று பிற கருத்துகளை ஏற்று கொண்டு பரப்புவதற்கு பதிலாக பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் அபாயங்களை எதிர்கொள்வதில் விழிப்புணர்வும், எச்சரிக்கையும் தேவையானதாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

    மொத்த உலகத்தையும் உலுக்கிய இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் 'ஃப்ளைதுபாய்' விமான நிறுவனம் தான். இந்த விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. விடை தெரியாமல் பல கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் பல விவகாரங்கள் மறைக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு 'ஃப்ளைதுபாய்' என்ற விமான நிறுவனம் சட்டவிதியை மீறி செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் சட்டப்படி உலகில் எந்த பகுதியில் இருந்தும் இஸ்ரேலுக்கு விமானத்தை இயக்க வேண்டும் என்றால் அந்த விமான நிறுவனம் இஸ்ரேல் நாட்டுடன் நல்ல உறவில் உள்ள நாடுகளை சேர்ந்த பைலட்டுகளை தான் பணியமர்த்த வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு சென்ற 'ஃப்ளைதுபாய்' விமானத்தை இந்திய விமானி ஸ்மித் மச்சார், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி இயக்கினர்.

    Advertisement

    இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் ஸ்மித் மச்சார் கேப்டனாக செயல்பட்டதில் பிரச்சனை இல்லை. ஆனால் ஓமன் நாட்டுடன், இஸ்ரேலுக்கு நல்ல உறவு இல்லை. இருநாடுகள் இடையே பிரச்சனை உள்ளது. இருநாடுகள் இடையே தூதரக ரீதியாகவும் எந்த உறவும் இல்லை. இப்படியான சூழலில் 'ப்ளைதுபாய்' விமான நிறுவனம் இஸ்ரேல் நாட்டுக்கான விமானத்தில் ஓமன் பைலட்டை துணை விமானியாக நியமித்துள்ளது. இது அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டுவதோடு, இதன் பின்னணியில் வி
    மான நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்று இஸ்ரேல் சந்தேகம் கிளப்பி வருகிறது.

    Advertisement

    முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு நேற்று முன்தினம் 'ஃப்ளைதுபாய்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான FZ1073 விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றார். விமானத்தில் 174 பயணிகள், 6 பணியாளர்கள் பயணித்த நிலையில் விமானத்தை கடத்தி வேகமாக தரையில் மோதி வெடிக்க செய்து அனைவரையும் கொல்வதே அவரது நோக்கமாக இருந்தது.

    இதற்காக அவர் தன்னுடன் பணியில் இருந்த மும்பையை சேர்ந்த பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திவிட்டு விமானத்தை வானில் இருந்து வேகமாக தரையிறக்கினார். வெறும் 90 நிமிடத்தில் இந்த விமானம் 17,400 அடி உயரத்தை குறைத்து மின்னல் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார், சக பயணிகள் இணைந்து இந்த விமான கடத்தலை தடுத்தனர்.

    Advertisement

    உடனடியாக பணி முடித்த 2 பைலட்டுகள் விமானத்தை இயல்பு நிலைக்கு கொண்டு சென்றனர். தற்போது ஓமன் துணை விமானி கைது செய்யப்பட்டுள்ளார். கத்திக்குத்து கயமடைந்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.

    English Summary

    Dubai - Tel Aviv Flight: The United Arab Emirates-home to the airline Flydubai-has, for the first time, described the attempted hijacking of a Dubai-Tel Aviv flight as a dangerous act of terrorism. "This was a dangerous act of terrorism. The actions of the Indian pilot, Smith Machar, at a moment when a catastrophe was imminent, deserve the highest praise," stated Anwar Gargash, Diplomatic Advisor to the UAE President.