காபி குடிக்கும்போதே வந்த ₹9.5 கோடி ஜாக்பாட்! துபாய் லாட்டரியில் லெபனான் தொழிலதிபருக்கு அதிர்ஷ்டம்

  • துபாய்: லெபனான் நாட்டைச் சேர்ந்த 53 வயதான அண்டோனி லபாகி. இவர் ஒரு கட்டுமானத் தொழில் செய்யும் தொழிலதிபருக்கு அதிர்ஷ்டம் தேடிவந்து கொட்டியிருக்கிறது.. இவர் துபாய் டியூட்டி ப்ரீ (Dubai Duty Free) என்ற புகழ்பெற்ற லாட்டரி சீட்டை ஆன்லைனில் வாங்கியிருந்தார்.. அதில் இவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் பரிசு கிடைத்துள்ளது. அதாவது நம்ம ஊர் மதிப்புப்படி சுமார் ₹9.5 கோடி ஆகும்.

    Advertisement

    லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் நகரைச் சேர்ந்தவர் இந்த அதிர்ஷ்டசாலி நபர் பெயர் அண்டோனி லபாகி.. 53 வயதாகிறது.. புகழ்பெற்ற மில்லேனியம் மில்லியனர் குலுக்கலில் இவர் வெல்லும் 3-வது பெரிய பரிசு இதுவாகும்..

    Advertisement

    லாட்டரியில் அதிர்ஷ்டம்

    கடந்த ஜூலை 17ம் தேதி ஆன்லைனில் 3360 என்ற நம்பர் கொண்ட டிக்கெட்டை வாங்கியிருந்தார்.. அந்த டிக்கெட்டுக்குதான் இப்போது இந்த ஜாக்பாட் கிடைத்துள்ளது.

    பெய்ரூட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது சகோதரியுடன் உட்கார்ந்து காபி குடித்து கொண்டிருந்தாராம்.. அப்போதுதான், துபாயில் இருந்து அவருக்கு இந்த அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.. துபாய் டியூட்டி ப்ரீ வரலாற்றிலேயே 2 முறை 1 மில்லியன் டாலர் தொகையை வென்ற 12-வது நபர் என்ற பெருமையையும் இதன் மூலம் அண்டோனி லபாகி கைப்பற்றியுள்ளார்.

    சொகுசு பிஎம்டபிள்யூ கார்

    அண்டோனி லபாகிக்கு துபாய் டியூட்டி ப்ரீ மூலம் கிடைக்கும் 3-வது பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற குலுக்கலில் சொகுசு பிஎம்டபிள்யூ காரையும், 2018ம் ஆண்டில் தனது முதல் 1 மில்லியன் டாலர் ஜேக்பாட்டையும் அவர் வென்றிருந்தார்.

    Advertisement

    இப்படி பரிசு கிடைத்ததுமே திக்குமுக்காடி பேய்விட்டார் அண்டோனி லபாகி. இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டி தந்த அவர், "கடந்த 2018ம் ஆண்டு நான் முதன்முதலில் வென்ற 1 மில்லியன் டாலர் தொகையை எனது சொந்த நாடான லெபனானுக்கு மாற்றினேன். ஆனால் அங்கு நிலவிய மோசமான அரசியல் மற்றும் சீரற்ற பொருளாதார சூழல் காரணமாக அந்த பணத்தை என்னால் சரியாக முதலீடு செய்ய முடியவில்லை.. அந்த பணத்தையும் இழந்து விட்டேன்..

    துபாயில் முதலீடு, சொந்த வீடு

    இப்போது அந்த தவறில் இருந்து நான் பாடம் கற்றுக்கொண்டேன். அதனால் இந்த முறை மிகவும் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளேன்.. இந்த முறை இந்த முழுப் பணத்தையும் உலகின் மிகப்பாதுகாப்பான நகரமான துபாயிலேயே முதலீடு செய்யப் போகிறேன்.

    Advertisement

    துபாயில் எனக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கி, எனது கட்டுமான தொழிலையும் இங்கேயே விரிவுபடுத்தி, எனது குடும்பத்துடன் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளேன்.. துபாய் நகரம் எனக்கு உலகத்தையே பரிசாகக் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கப் போகிறேன்" என்று நெகிழ்ந்து கூறுகிறார்.

    ஆக, லபாகி, இந்த மொத்த பணத்தையும் துபாயிலேயே முதலீடு செய்ய போகிறார்.. துபாயில் சொந்தமாக ஒரு வீட்டைக் வாங்கி, பிசினஸ் பிரான்ச்சுகளையும் ஆரம்பிக்க போகிறார்.. இந்த செய்திதான் இணையவாசிகளால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது...!!

    English Summary

    Dubai Duty Free Lotter.. Lebanese Businessman Wins $1 Million Jackpot Again, Plans Dubai Investment