துபாயில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்: கிரீன் குளோப் அமைப்பின் அசத்தல் முயற்சி!

  • துபாய்: பல்வேறு மனிதநேய மற்றும் சமூக நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும், துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கிரீன் குளோப் அமைப்பின் சார்பாக, சனிக்கிழமை 19.09.2026 மாலை 3.30 மணியளவில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஹோர் அல் அன்ஸ் துபாய் லைப்ரரியில் சிறப்பாக நடைபெற்றது.

    Advertisement

    காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம், பசுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.

    Advertisement

    நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக துபாயைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் முனைவர் கெனா முசயித் அல்மட்ரி, மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், செம்மொழி முத்தமிழ் சங்க தலைவர் ஷா, தமிழ் பஸ் ஊடக நிறுவனத்தின் ஷாஹுல் மற்றும் ரைஹானா, இந்தியர் நலவாழ்வு பேரவையின் அமீரக துணைத் தலைவர் ஏ.எஸ். இப்ராஹிம், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி நவாஸ்தீன், தமிழ் தலைவா யூடுபர் காயல் அப்துல் லத்தீப், டிராவல்ஸ் நிறுவனத்தின் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மேலும், சிறப்பு அழைப்பாளராக துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குனர் பேராசிரியர் முனைவர் சித்திரை பொன் செல்வன் அவர்கள் கலந்துகொண்டு காலநிலை மற்றும் பருவநிலை மாற்றம், அவற்றின் தாக்கங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பயனுள்ள கருத்துகளையும் ஆலோசனைகளையும் தனது சிறப்புரையின் மூலம் வழங்கினார்.

    துபாய் மணிப்பால் அகாடமியை சேர்ந்த மாணவி சுஜிதாபிரியா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான லைவ் ஆர்ட் நிகழ்ச்சியை வழங்கினார்.

    இந்நிகழ்வை கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான ரஸூல், அப்துல் ரஹ்மான், தாஹிர்,சாபீர், பீர் முஹம்மது மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்

    Advertisement

    சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்கள், தன்னார்வலர்கள், கிரீன் குளோப் உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    English Summary

    Dubai Green Globe Hosts Major Environmental Awareness Seminar at Hor Al Anz