துபாயில் பிரம்மாண்ட இரத்ததான முகாம்.. கிரீன் குளோப் அமைப்பின் நெகிழ்ச்சி முயற்சி!

  • துபாய் : இரத்ததானம் என்பது உயர்ந்த மனிதநேயச் சேவையாகும். உயிரைக் காப்பாற்றும் உன்னதப் பணியான இரத்ததானத்தை தொடர்ந்து பல்வேறு முகாம்கள் மூலம் ஒருங்கிணைத்து, பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் துபாயைச் சேர்ந்த கிரீன் க்ளோப் அமைப்பின் சார்பாக, இந்தியத் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, துபாய் லூலூ ஹைபர் மார்க்கெட் வளாகத்தில் சிறப்பு இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

    Advertisement

    இந்த நிகழ்விற்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார். கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான ரசூல், பீர் முஹம்மது, சாபிர் மற்றும் அப்துர் ரகுமான் ஆகியோர் நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

    Advertisement

    இந்த முகாமில் சுமார் 110 இரத்ததான கொடையாளர்கள் பதிவு செய்து, தங்களது ரத்தத்தை தானமாக வழங்கினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இச்சிறப்பு முகாமில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் பங்கேற்று தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தது பாராட்டுக்குரியது.

    சுமார் 110 இரத்ததான கொடையாளர்களை ஒருங்கிணைத்து, முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினார்களாக மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், ஜாகுவர் பிரின்டிங் பிரஸ் உரிமையாளர் ஷா, ஆல்பா கிட்ஸ் அஜ்மான் உரிமையாளர் மஞ்சுளா, பிளசன்ட் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் நிறுவனர் மாஜிதா பேகம், பீஸ் அண்ட் கேர் உரிமையாளர் ரபீக், ஆசிரியை பீமா சிராஜ், துபாய் மைந்தன் நசீர் மற்றும் ஜாபர், ஜி கட் ஸ்டூடியோ நிறுவனர் ஜெயராஜ் கஸ்மீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்களின் தன்னலமற்ற சேவையும், சிறப்பான ஒருங்கிணைப்பும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    Advertisement

    நிகழ்ச்சியின் நிறைவில், இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த லூலூ ஹைபர் மார்க்கெட் நிர்வாகத்தினர், ரத்ததான கொடையாளர்கள், தன்னார்வலர்கள், கிரீன் குளோப் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

    மேலும், நிகழ்வில் பங்கேற்ற இரத்ததான கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்காக தேநீர், சிற்றுண்டி மற்றும் உணவு உள்ளிட்டவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    English Summary

    Dubai Green Globe Marks India’s 80th Independence Day with Massive Blood Donation Drive at Lulu Hypermarket