துபாய்: சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் துபாய் புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளை சேர்ந்தவர்களை துபாய்க்கு அழைத்து வந்தால் சிறப்பு பரிசு கிடைக்குமாம். ஒரு நபரை அழைத்து வந்தால் ரூ.79,000 மதிப்பிலான பரிசுகள் கிடைக்கும் என துபாய் அறிவித்துள்ளது.
வளைகுடாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் பதற்றம் காரணமாக துபாயில் சுற்றுலா பயணிகள் வருகை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றும் முயற்சிக்கு இது பெரும் தடையாக மாறியிருக்கிறது. இதற்கிடையே சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் துபாய் அரசு இப்போது புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதாவது வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை துபாய்க்கு அழைத்து வருவோருக்கு ஊக்க தொகை வழங்கப்படுமாம். 'A Dubai Invite' என்ற இந்த புதிய திட்டத்தை துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான அமீரக குடியிருப்பாளர்கள் அல்லது குடியுரிமை பெற்றவர்கள், தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களை துபாய்க்கு அழைத்து வந்தால்.. அவர்களுக்கு 3,000 திர்ஹாம் (சுமார் ரூ.79,000) மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். அதிகளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை துபாய்க்கு ஈர்ப்பதே இதன் நோக்கமாகும். துபாய் மக்களையே சுற்றுலா தூதர்களாக மாற்றுவதே அரசின் நோக்கமாக இருக்கிறது. இந்த சலுகை ஜூலை 20 முதல் அக்டோபர் 31 வரை பொருந்தும் என்றும் அந்த காலகட்டத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு அழைத்து வரும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்கும். இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் அல்லது குடியுரிமை பெற்றவர்கள், தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் துபாய்க்கு வருவதற்கு முன்பாகவே, அவர்களின் விவரங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் அதிகபட்சம் 5 பேரை பரிந்துரைக்கலாம். அதற்கு மேல் இருந்தால் தனித்தனி விண்ணப்பங்களைப் பதிவிட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் துபாய்க்கு வந்ததும், அவர்களின் வருகை தானாகவே சரிபார்க்கப்படும். அதன் பிறகு, பரிசுகளை பெறும் முறை குறித்த தகவல்கள் மெயில் மூலம் அனுப்பப்படும். இதன் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அந்த சலுகைகளை டிசம்பர் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அனைவருமே இந்த திட்டத்தின் கீழ் பரிசுகளை பெற முடியாது. அதற்காக தனியாக சில தகுதிகளும் உள்ளன. அதன்படி, அதேநேரம் இந்த திட்டத்தில் விண்ணப்பித்தாலே விசா கிடைத்துவிடும் என்று உறுதியளிக்க முடியாது. விசா ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட பயணிகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு நபரையும் துபாய்க்கு அழைத்து வரும்போது ரூ.79,000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். சொகுசு ஹோட்டல்களில் இலவச தங்கும் வசதி, பிரபல உணவகங்களில் டைனிங் சலுகைகள், சுற்றுலா தலங்களுக்கான நுழைவுச் சீட்டுகள் என பல தள்ளுபடிகள் வழங்கப்படுமாம். மேலும், இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபரை ஒருமுறை மட்டுமே பரிந்துரைக்க முடியும். ஏற்கனவே வேறு ஒருவர் அந்த நபரை பதிவு செய்திருந்தால், மீண்டும் அவரை பரிந்துரைத்தாலும் பரிசு வழங்கப்படாது. மேலும், பரிந்துரைத்த நபர் துபாய் ஏர்போர்ட் வந்து இறங்கியவுடன் தனியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே சரிபார்க்கப்படும். பரிந்துரைத்த நபர் வந்தது உறுதி செய்யப்பட்ட 3 நாட்களுக்குள் விவரங்கள் அனுப்பப்படுமாம். ஒரு நபர் இதில் அதிகபட்சமாக 3 முறை பரிசுகளை பெற முடியும்பரிசு தொகை
5 பேரை பரிந்துரைக்கலாம்
விதிகள்
கவனிக்க வேண்டியவை