கை, காலை கூட நீட்ட முடியாது.. ஆனா இந்த ரூம் வாடகை ரூ.30,000.. துபாயில் மிரள வைக்கும் வீட்டு வாடகை

  • துபாய்: துபாய் என்றாலே ஆடம்பர வாழ்க்கை, அதிக சம்பளம், விலை உயர்ந்த கார்கள், பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஆகியவை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அங்கும் கூட கிட்டத்தட்ட தினக்கூலியை போல வாழும் வெளிநாட்டினர் பலரும் இருக்கவே செய்கிறார்கள். அப்படி வாழும் வெளிநாட்டினர் அங்கு தங்கும் வீட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    ஆடம்பரத்தின் உச்சமாக இருக்கும் துபாயில் குறைந்த செலவில் வாழ்க்கையை நடத்த முயலும் வெளிநாட்டினர் பலர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்ட அனுபவமாகவே இருக்கிறது. இதற்கிடையே துபாயில் மாதம் ரூ.30,000 வாடகைக்கு எப்படிப்பட்ட ரூம் கிடைக்கும் என்பதை விளக்கி இந்திய பெண் பகிர்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    ரூ.30,000 வாடகை

    "ரூ.30,000க்கு துபாயில் என்ன கிடைக்கும்?" என்று அந்த பெண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் அவர் வெளிநாட்டினர் தங்கும் சிறிய அறையை விளக்குகிறார். முதலில் குறுகலான பாதை வழியாக அவர் நடந்து செல்கிறார். பின்னர், மிக சிறிய அமைப்பை கொண்ட சிறிய அறைக்குள் செல்கிறார். ஒருவருக்கு மேல் படுக்க முடியாத அளவுக்கு மிக சிறியதாக அந்த ரூம் இருக்கிறது.

    அந்த ரூமின் மேற்பகுதியில் ஒரு படுக்கை அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதியில் ரூம் போன்ற செட் அப் இருக்கிறது. பொருட்களை வைக்க கூட குறைந்த அளவே இடம் இருப்பது வீடியோவில் தெரிகிறது. அதேநேரம் துபாய் வெப்பத்தை சமாளிக்க அந்த சின்ன ரூமிற்கு கூட ஏசி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    அதிர்ச்சி தகவல்

    ஒருவர் கூட வசதியாக தங்க முடியாத அளவுக்கே இந்த ரூம் இருக்கிறது. ஆனால், இந்த ரூமை காட்டி அந்த பெண் கூறிய தகவல்கள் தான் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. அதாவது ஒருவர் தனியாக இந்த அறையில் தங்கினால் மாத வாடகையாக சுமார் 1,200 முதல் 1,300 திர்ஹாம் வரை செலுத்த வேண்டும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 முதல் ரூ.33,000 வரை இருக்கும்.

    அதே அறையில் இருவர் தங்கினால் மாத வாடகை சுமார் 1,400 முதல் 1,500 திர்ஹாம் வரை இருக்கும் என்றும், இந்திய மதிப்பில் இது ரூ.36,000 முதல் ரூ.39,000 வரை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு சின்ன ரூமில் ஒருவர் தங்குவதே கஷ்டமான விஷயம். ஆனால், இதில் இருவர் ஷேர் செய்து தங்குகிறார்கள் என்பதை கேட்டால் நமக்கு தலையே சுற்றுகிறது.

    Advertisement

    நெட்டிசன்கள்

    ரூமில் நமது பொருட்களை வைக்கும் இடமும் கூட மிக குறைந்த அளவிலேயே இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்கியிருப்பவர்கள் தங்களது உடைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர் காட்டியுள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை செய்த பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். நெட்டிசன் ஒருவர், "துபாயில் அனைவரும் இதுபோன்ற இடத்தில் இருந்து தான் தங்களது பயணத்தைத் தொடங்குகிறார்கள். நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்" என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "நான் இப்படிப்பட்ட இடத்தில் தங்கியிருந்தால் மூச்சுத் திணறுவது போல் உணர்ந்திருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    துபாய்

    உலகின் ஆடம்பரமான குடியிருப்புகள் மற்றும் அதிக வருமானத்தை தரும் வேலைவாய்ப்புகளுக்கு துபாய் பெயர் பெற்றிருந்தாலும், அங்கு வாழ்க்கை செலவு பலருக்கு மிக பெரிய சவாலாக இருக்கிறது. குறிப்பாக குறைந்த அல்லது நடுத்தர அளவிலான சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி வாடகை மற்றும் அடிப்படை செலவுகளுக்கே சென்றுவிடும் நிலை இருக்கிறது.

    English Summary

    Indian woman living in Dubai has shared a video showing a tiny room rented by expatriates for around ₹30,000 to ₹33,000 a month(துபாயில் உச்சத்தில் வீட்டு வாடகை): Dubai Rent Shock news in tamil.