கச்சா எண்ணெய்யை விட பல மடங்கு லாபம்! அமீரகம் போடும் பிரம்மாண்ட பிளான்.. 27 நாடுகள் காலி!

  • துபாய்: சமீப ஆண்டுகளாகவே ஏஐ துறையில் தான் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அதேநேரம் அனைத்து நாடுகளும் ஏஐ துறையை ஒரே போல அணுகுவதில்லை. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு முக்கிய மார்கெட்டாக இருக்கும் அமீரகமும், ஐரோப்பிய ஒன்றியமும் இதை முற்றிலும் நேர்மாறாக அணுகுகிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    ஏஐ என்பது தான் அடுத்த கச்சா எண்ணெய் என்பதே பலரது கருத்து. அதாவது கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் எப்படி பல வளைகுடா நாடுகளின் நிலைமையை தலைகீழாக மாற்றியதோ அதேபோல வரும் காலத்தில் ஏஐ இருக்கும் என்கிறார்கள். இதன் காரணமாகவே உலக நாடுகள் ஏஐ துறையில் கவனம் செலுத்தி வருகிறது.

    Advertisement

    ஏஐ தொழில்நுட்பம்

    கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பதே முக்கிய விவாதமாக இருந்தது. ஆனால் இப்போது அது அடுத்த கட்டத்திற்கு போய் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவது, அதன் உரிமையை யார் தக்கவைப்பது என்பதை நோக்கி ஏஐ நகர்ந்துள்ளது. பல நிறுவனங்கள் AIஐ ஏற்றுக்கொண்டாலும், ஏஐ அமைப்புகள் உருவாக்கும் டேட்டாவை கட்டுப்படுத்துவது யார் என்பதே இப்போது அடுத்து எழும் கேள்வியாக இருக்கிறது.

    ஏஐ டெவலப்மெண்ட்டை பொறுத்தவரை அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2வது இடத்திலும் இருக்கிறது. அடுத்த இடத்தில் யார் என்பதே இப்போது பெரிய போட்டி. இதில் அமீரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வைத்திருக்கும் அணுகுமுறைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு பக்கம் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் தருகிறது. மறுபுறம் புதுமைகள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமீரகம் தனது கட்டுப்பாடுகள் தளர்த்தியே வைத்திருக்கிறது.

    Advertisement

    ஐரோப்பா

    AI தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், யூசர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் AI Act என்ற கடுமையான சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சட்டம் புதிதாக உருவாகும் AI நிறுவனங்களுக்குக் கூடுதல் சுமையாக மாறி வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    குறிப்பாக மருத்துவம், நிதிச் சேவைகள் போன்ற ஹை ரிஸ்க் AI செயலிகளை உருவாக்கும் நிறுவனங்கள், சந்தையில் நுழைவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான யூரோக்களை ஒழுங்குமுறை ரூல்ஸுக்கு செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்த செலவு 5 லட்சம் யூரோவுக்கும் (ரூ.5.5 கோடி) மேல் செல்லும் என கூறப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இது பெரிய தொகை. இதன் காரணமாகவே பல நிறுவனங்கள் துபாய் பக்கம் வர ஆரம்பித்துள்ளன.

    Advertisement

    அமீரகம்

    ஆளில்லாமல் வாகனம் ஓட்டும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் இத்தாலியை சேர்ந்த நிறுவனம், தனது சொந்த நாட்டில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, துபாயில் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. துபாய் விதிமுறைகள் எளிமையாகவும் புதுமைகளுக்கு ஏற்கும் வகையில் இருப்பதுமே இதற்கு காரணம் என்கிறார். இதுவே இப்போது அமீரகத்திற்கு பெரிய பலமாக மாறியுள்ளது. AI துறையில் முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபியில் டேட்டா சென்டர், கிளவுட் கட்டமைப்புகள், சூப்பர் கம்ப்யூட்டிங் வசதிகள் மற்றும் ஏஐ ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    சர்வதேச அளவில் பார்க்கும்போது, 2025ல் சர்வதேச ஏஐ முதலீட்டில் அமெரிக்கா 70 சதவீதத்தை ஈர்த்த நிலையில், ஐரோப்பா வெறும் 6 சதவீதத்தை மட்டுமே ஈர்த்துள்ளது. இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும் நிலையில், அமீரகம் இதில் பெரிய லாபத்தை பார்க்கவுள்ளது. கட்டுப்பாடுகள் என்பது மக்களுக்கு நல்லது என்றாலும் முதலீட்டாளர்கள் அதை வளர்ச்சியை தடுக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே அமெரிக்காவுக்கு அடுத்து ஏஐ ஸ்டார்ட்அப்களுக்கு அமீரகம் முக்கிய மையமாக மாறியுள்ளது.

    Advertisement

    அடுத்த ஏஐ போட்டி

    ஏஐ துறையில் போட்டி என்பது அதை எப்படி யூஸ் செய்கிறார்கள் என்பதிலிருந்து AIஐ கட்டுப்படுத்துவது யார் என்பதை நோக்கி நகர்ந்துள்ளது. டேட்டா எங்கு சேமிக்கப்படுகிறது, யார் அதை பயன்படுத்த முடியும், ஏஐ உருவாக்கும் தகவல்கள் யாருடைய சொத்து என்பவையே எதிர்காலத்தில் மிக பெரிய பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு கேள்விகளாக மாறக்கூடும்!

    இதன் காரணமாகவே ஏஐ தொழில்நுட்பத்திற்கு மற்ற நாடுகளை நம்பாமல் மிக பெரிய கட்டமைப்பை அமீரகம் உருவாக்கி வருகிறது. ஐரோப்பா விதிமுறைகளில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், AI நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக அமீரகம் மாறி வருகிறது.!

    English Summary

    As Europe tightens AI regulations through the AI Act, the UAE is rapidly attracting AI startups(ஏஐ ரேஸில் முந்தும் அமீரகம்): UAE is winning big at AI Race.