துபாய்: இஸ்ரேல் சென்ற விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தாக்குதல் குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், அதில் வெளியாகும் தகவல்கள் பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது. இதற்கிடையே ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்திய ஓமன் விமானியின் கடந்த காலத்தை ஆய்வு செய்து பார்க்கும்போது, அவரது சிரியா பயணம் மட்டுமே மர்மமாக இருக்கிறதாம்.!
துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவங்கள் உலகெங்கும் விவாதமாகியுள்ளது. அதில் துணை பைலட்டாக இருந்த ஓமனை சேர்ந்தவர், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு, விமானத்தை விபத்திற்குள்ளாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி விமானத்தை கைப்பற்ற முயன்றதாகவும், பின்னர் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என ஐக்கிய அமீரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், அல்-ஹம்மாமியின் பின்னணி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஊடகங்கள் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. 29 வயதான அல்-ஹம்மாமி ஏற்கனவே அடிப்படைவாத கருத்துகளை கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாகவும் இதனால் அவர் விமானம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-ஹம்மாமியின் வாழ்க்கையில் மிகவும் மர்மமான பகுதியாக சிரியாவில் அவர் கழித்த காலம் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. ஓமன் நாட்டை சேர்ந்த இவர், ஐக்கிய அமீரகத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும் சிரியாவை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் என கூறப்படுகிறது. 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், அவர் சிரியாவில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு வயது சுமார் 14 முதல் 21 வயது வரையாகும். இந்த காலகட்டம் தான் அவரது வாழ்க்கையில் மர்மமானதாக இருக்கிறது. சிரியாவில் இருந்தபோதுதான் அல்-ஹம்மாமி தீவிரவாத கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கலாம் என ஓமன் அதிகாரிகள் கருதுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சிரியாவுக்கு எப்போது சென்றார், அங்கு எந்த பகுதியில் வசித்தார், எவ்வளவு காலம் இருந்தார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. அவர் சிரியாவில் இருந்த காலமே, தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. அதேநேரம் அவர் எந்தவொரு தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பில் இருந்தார் என்பதற்கான உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பிப்ரவரி 2018ல் அல்-ஹம்மாமி ஓமன் ஏவியேஷன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அங்கு சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2025 பிப்ரவரி வரை அந்த நிறுவனத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் 2020 முதல் 2023 வரை இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் விமான போக்குவரத்து நிர்வாகம் தொடர்பான படிப்பையும் முடித்துள்ளார்.. இது ஆன்லைன் படிப்பு என்பதால் அவர் இங்கிலாந்தில் தங்கி படிக்கவில்லை. தொடர்ந்து 2022 ஜனவரி முதல் ஓமன் ஏவியேஷனில் போயிங் 737 விமானத்தில் துணை விமானியாக பணியாற்ற தொடங்கியுள்ளார். அல்-ஹம்மாமியின் விமான பணியில் 2024ம் ஆண்டு முக்கிய திருப்பமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அப்போதே அவரிடம் தீவிரவாத கருத்துகளை வெளிப்படுத்தும் பொருட்கள் இருந்ததை உளவுத்துறை கண்டறிந்து எச்சரித்துள்ளது. இதையடுத்து அவர் விமான பணியில் இருந்து நீக்கப்பட்டு, நிர்வாக பணிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதே அவரது சிரியா பயணமும் கவனம் பெற்றது. அங்கு அவர் தீவிரவாத கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதற்கிடையே 2025 பிப்ரவரியில் ஓமன் ஏவியேஷனில் இருந்து வெளியேறிய அல்-ஹம்மாமி, சுமார் 4 மாதங்களுக்கு பிறகு ராயல் ஏர் மரோக் நிறுவனத்தில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அங்கு சுமார் 7 மாதங்கள் பணியாற்றிய அவர், 2026 ஜனவரியில் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ஃப்ளைதுபாயில் இணைந்து துணை விமானியாக பணியாற்ற தொடங்கினார். சுமார் 8 மாதங்களுக்கு பிறகு, செப்டம்பர் 30ம் தேதி ஸ்மித் மச்சாரை தாக்கியுள்ளார். சிரியாவில் அவர் இருந்த காலத்தில் உண்மையில் என்ன நடந்தது, அப்போது அவர் மூளைச்சலவை செய்யப்பட்டாரா.. 2024-ல் ஓமன் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்கள் என்ன என்பதே மிக பெரிய கேள்வியாக உள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தால்தான் செப்டம்பர் 30ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த காரணத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.தாக்குதல்
சிரியா பயணம்
என்ன செய்தார்
நீக்கம்
மர்மம்