துபாய்: துபாய் விமான சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. காக்பிட்டுக்குள் இந்திய விமானி சுமித் மச்சாருக்கு கத்திக்குத்து.. ஒரு பக்கம் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பயணிகள் காக்பிட்டுக்குள் ஓடிச் சென்றார்கள். அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவங்கள் தான், விமானத்தில் இருந்த 174 பேரையும் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறது..
நேற்று முதல் இதற்கான காரணங்களை சோஷியல் மீடியாவில் இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்... நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக பார்த்தால், இந்த விமானம் பெரிய விபத்தில் சிக்காமல் தப்பியதற்கு ஒன்றல்ல.. பல விஷயங்கள் கை கொடுத்திருக்கின்றன.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்திருந்தாலும், இந்திய விமானி சுமித் மச்சார் அப்படியே விட்டுவிடவில்லை. காக்பிட் கதவை திறந்துள்ளார்.. இதுதான் முதல் முக்கியமான விஷயம். கதவு திறந்ததால்தான் வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்று நிலைமையை சமாளிக்க முடிந்தது.. அந்த கதவு திறக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதே பெரிய கேள்வியாகி இருக்கும். கதவு திறந்ததும் சில பயணிகள் தங்கள் உயிரை பற்றி யோசிக்காமல் காக்பிட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்ததோடு, தாக்குதல் நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்தவும் முயன்றார்கள். அந்த நேரத்தில் யாராவது தயங்கியிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கலாம். காக்பிட்டுக்குள் சென்ற பயணிகள், தாக்குதல் நடத்திய துணை விமானியை பிடித்து கட்டுப்படுத்தினர். அவர் மீண்டும் பிரச்சனை செய்யாமல் இருக்க, விமானத்தில் இருந்த ஹெட்செட் கயிறு மற்றும் ஜிப் டை ஆகியவற்றை பயன்படுத்தி அவரை கட்டி வைத்தனர். இதனால் விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. யனிவ் ஹயூன் விமானி கிடையாது. ஆனாலும் விமானம் வேகமாக கீழே செல்வதை பார்த்ததும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முயன்றார். காக்பிட்டில் இருந்த சில கட்டுப்பாடுகளை இயக்கி விமானத்தை மீண்டும் மேலே கொண்டு வர உதவியிருக்கிறார். விமான விபத்துகள் தொடர்பான நிகழ்ச்சிகளை டிவியில் பார்ப்பது அவருக்கு வழக்கமாம்.. அதனால் விமானத்தில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் குறித்து அவருக்கு ஓரளவு தெரிந்திருந்தது. அந்த நேரத்தில் அந்த சிறிய அறிவே பெரிய உதவியாக அமைந்திருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பணியில் இல்லாத 2 விமானிகளும் அதே விமானத்தில் பயணிகளாக இருந்திருக்கிறார்கள். பிரச்சனை ஏற்பட்டதும் அவர்கள் காக்பிட்டுக்குள் சென்று உதவினார்கள். விமானத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர்கள் அந்த நேரத்தில் அங்கே இருந்தது மிகப்பெரிய உதவியாக அமைந்தது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பணியில் இல்லாத 2 விமானிகளும் அதே விமானத்தில் பயணிகளாக இருந்திருக்கிறார்கள். பிரச்சனை ஏற்பட்டதும் அவர்கள் காக்பிட்டுக்குள் சென்று உதவினார்கள். விமானத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர்கள் அந்த நேரத்தில் அங்கே இருந்தது மிகப்பெரிய உதவியாக அமைந்தது. காயமடைந்த சுமித் மச்சாருக்கு உதவி கிடைத்த பிறகு, அந்த 2 விமானிகளும் விமானத்தை சமாளிக்க உதவினர். அதே நேரத்தில், பயணியாக வந்த பல் மருத்துவர் டாக்டர் ஷோதா முசேவ், ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த சுமித் மச்சாருக்கு உடனடியாக முதலுதவி அளித்தார். இதனால் காயமடைந்த விமானிக்கு தேவையான அவசர உதவி கிடைத்தது. விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டது தெரிந்ததும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன... அதற்குள் விமானம் எங்கு செல்ல வேண்டும், எங்கே தரையிறக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்டது. விமானம் பல ஆயிரம் அடி கீழே வேகமாக இறங்கியதால், அதன் பின்பகுதியிலும் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின... இவ்வளவு பிரச்சனை இருந்தும் விமானம் முழுமையாக கன்ட்ரோலை மட்டும் விடவில்லை.. அந்த நிலையிலும் விமானத்தை சமாளித்து பாதுகாப்பாக தரையிறக்கும் அளவுக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு கட்டத்தில் எல்லாமே கைமீறிப் போய்விட்டது போல இருந்தாலும், விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்... பிறகு சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதற்கு சவுதி அரேபியாவின் தபூக் ஏர்போர்ட் அனுமதி வழங்கியதுடன், தரைமட்டத்திற்கு வந்தடைந்த பயணிகளுக்கு உடனடி மருத்துவ உதவிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தந்தது பயணிகளின் உயிரைக் காக்க பெரிதும் உதவியது. அதனால் இந்த சம்பவத்தில் ஒருவருடைய முயற்சி மட்டும் இல்லை.. காயமடைந்த நிலையிலும் போராடிய இந்திய விமானி, துணிச்சலாக காக்பிட்டுக்குள் சென்ற பயணிகள், அங்கே உதவிய யனிவ் ஹயூன், விமானத்தில் இருந்த 2 விமானிகள் என பலருடைய செயல்பாடுகள் ஒன்றாக சேர்ந்ததால்தான் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.1. காயப்பட்ட நிலையிலும் சுமித் மச்சார் செய்த காரியம்
2. பயணிகள் காக்பிட்டுக்குள் ஓடிச் சென்றார்கள்
3. துணை விமானியை பிடித்துக் கட்டுப்படுத்தினர்
4. யனிவ் ஹயூன் சபாஷ் செயல்
5. விமானம் பற்றி அவருக்கு ஓரளவு தெரிந்திருந்தது
6. விமானத்தில் 2 விமானிகளும் இருந்தார்கள்
7. காக்பிட்டுக்குள் கன்ட்ரோலை எடுத்தனர்
8. அவசர நடவடிக்கைகள் உடனே ஆரம்பம்
9. விமானமே சேதமடைந்திருந்தது
10. சவுதியில் பத்திரமாக தரையிறங்கியது
174 பேரும் உயிர் தப்பினார்கள்