துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்துவதற்கு ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி எப்படி தயாரானார்? இந்த செயலுக்கு மனதளவிலும், உடலளவிலும் எப்படி தயாரானார் என்பது பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு தலைமை வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல் ஷம்சி திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு 'ஃப்ளைதுபாய்' விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை இயக்கிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை 'காக்பிட்' கோடரியால் கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தி விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றார் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி. இந்த விமானத்தில் 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என்று 180 பேர் பயணித்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் நாட்டைசேர்ந்தவர்கள். இதனால் தான் இந்த விமானத்தை கடத்தி டெல்அவிவ் நகரில் விமான நிலையத்தில் மோத வைத்து விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்திய பைலட் ஸ்மித் மச்சார், பயணிகள், விமானத்தில் கூடுதலாக பயணித்த பைலட்டுகள் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால் இந்த விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் தரையிறக்கப்பட்டது. தற்போது ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி பற்றி திடுக்கிட வைக்கும் தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல் ஷம்சி கூறியுள்ளார். இதுபற்றி அவர், '' ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி ஆஸ்திரேலியாவில் படித்தபோது தான் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. 2017 ம்ஆண்டில் இருந்து பயங்கரவாதம் சார்ந்த விஷயங்களை தேடித்தேடி படித்தள்ளார். பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களை போற்றும் சமூக வலைதளங்களை பின்தொடர தொடங்கி உள்ளார். நாளைடைவில் பயங்கரவாத தாக்குதலுக்கு முழுவீச்சில் ரெடியாக தொடங்கினர். உடல்அளவிலும், மனதளவிலும் இதற்காக பயிற்சி மேற்கொண்டார். தனி பயிற்சியாளரை வைத்து 'பாக்சிங்' கற்றுள்ளார். செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு 'ஃப்ளைதுபாய்' விமானம் பறந்து சென்றது. இந்த விமானத்தை கடத்தி டெல்அவிந் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் மோதி தற்கொலை தாக்குதலுக்கு ஓமன் துணை விமானி திட்டமிட்டு இருந்தார். இது திட்டமிடப்பட்ட குற்ற முயற்சியாகும். திட்டத்தை சரியாக வகுக்க வேண்டும் என்பதற்காக ஓமன் துணை விமானி இதற்கு முன்பு 2 முறை டெல்அவிவ் நகருக்கு விமானத்தை இயக்கி உள்ளார். முதல் 2 பயணத்தின்போது விமான பாதை, விமான நிலையம் குறித்து நன்கு அறிந்து கொண்டு 3வது பயணத்தில் விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார் தற்போது 3வது முறையாக பயணித்தபோது தான் அவர் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை தாக்கிவிட்டு விமானத்தை கடத்தி டெல்அவிவ் பென் குரியன் விமான நிலையத்தில் மோத நினைத்துள்ளார். இந்த திட்டத்தை அமெரிக்காவின் 9/11 தாக்குதல் முறையில் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்த விமான தாக்குதலை திட்டமிட்டே செய்ததாகஓமன் துணை விமானி ஒப்புக்கொண்டார். இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் வேறு யாரும் இல்லை. தானே இந்த திட்டத்தை வகுத்து செயல்பட்டதாக சொல்லியுள்ளார். இருப்பினும் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.சுட்டு கொல்லப்படும் ஓமன் துணை விமானி? ஐக்கிய அரபு அமீரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
"என் நண்பன் சாகக்கூடாது".. ஜூலை பிளானை ஒத்திவைத்தது ஏன்? சாவுக்கு அஞ்சாத ஓமன் பைலட்டின் மறுபக்கம்
இரண்டாக பிளந்த மண்டையோடு.. இந்திய பைலட்டின் மூளை பாதிக்க வாய்ப்பு - அவசர ஆபரேஷனின் ஷாக் பின்னணி