என் நண்பன் சாகக்கூடாது.. ஜூலை பிளானை ஒத்திவைத்தது ஏன்? சாவுக்கு அஞ்சாத ஓமன் பைலட்டின் மறுபக்கம்

  • துபாய்: இந்திய பைலட்டை தாக்கி துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்ற துணை விமானி ஹமிம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் அடுத்தடுத்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் கடந்த ஜூலை மாதமே இஸ்ரேல் விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்ததும், அந்த விமானத்தில் தனது நெருங்கிய நண்பர் விமான பணியாளராக இருந்ததால் அவர் இறந்துவிடுவார் என்று அந்த பிளானை கடைசி நேரத்தில் கைவிட்டதும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு 'ஃப்ளைதுபாய்' விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை இயக்கிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை குத்திவிட்டு விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றார் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி. அதிர்ஷ்டவசமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

    Advertisement

    இந்திய பைலட், பயணிகள், விமானத்தில் கூடுதலாக பயணித்த பைலட்டுகள் உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியால் இந்த விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஐக்கிய அர அமீரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணையில் அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக Ynet செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ''ஹமாம் அல் ஹமாமி ஜோர்டான் வான்வெளியில் வைத்து பைலட் ஸ்மித் மச்சாரை தாக்க வேண்டும் என்று நினைத்தார். அங்கு அவரை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த வேண்டும் என்று நினைத்தார். ஜோர்டான் வான்வெளியில் பைலட்டை தாக்கி விமானத்தை கைப்பற்றினால் இஸ்ரேலால் அந்த விமான விபத்தை தடுக்க முடியாது.

    Advertisement
    ஓமன் பைலட் விமானத்தை மோத தேர்வு செய்த இடம் எது தெரியுமா? பலி ஆயிரத்தை தாண்டியிருக்குமாம்! பகீர்

    விமானம் கடத்தப்பட்டது பற்றி அறிந்தாலும் கூட இஸ்ரேலால் உடனடியாக ரியாக்ட் செய்ய முடியாது. ஒருவேளை விமானம் கடத்தல் முயற்சி தோல்வியடைந்தாலும் கூட டெல்அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டடம்அல்லது ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் விமானத்தை மோத வைக்கலாம் என்பது தான் அவரது திட்டமாக இருந்துள்ளது. இருப்பினும் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் போராட்டத்தால் ஹமாம் அல் ஹமாமியின் முயற்சி தோல்வியடைந்தது'' என கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் இஸ்ரேலை சேர்ந்த சேனல் 12 என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ''
    மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் ஹமாம் அல் ஹமாமி 'ஃப்ளை துபாய்' விமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களை தேடி இந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்அவிவ் நகருக்கு விமானத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

    Advertisement
    காசாவிற்காக உயிர் தியாகம்.. விசாரணையில் ஓமன் துணை விமானி வாக்குமூலம் - பகீர் தகவல்

    முதலில் விமான நிறுவனத்தின் நம்பிக்கையை பெற வேண்டும். அதன்பிறகு தான் விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காத்திருந்தார். உரிய சந்தரப்பத்தை எதிர்நோக்கி இருந்தார். அதுவரை டெல்அவிவ் விமான நிலையம் பற்றிய விஷயங்களை சேகரித்து வைத்துள்ளார்.

    இதற்கிடையே தான் கடந்த ஜூலை மாதமே திட்டமிட்டார். ஆனால் அன்றைய தினம் அவர் இயக்கிய விமானத்தில், பயணித்த விமான பணியாளர்களில் ஒருவர் அவரது நெருங்கிய நண்பர். இதனால் விமான விபத்தை ஏற்படுத்தினால் தனது நண்பர் இறந்து விடுவார் என்று நினைத்தார். அவருக்காகவே அன்றைய தினம் திட்டமிட்ட விமான விபத்தை அவர் கைவிட்டார். இப்போது மீண்டும் விமான விபத்தை ஏற்படுத்த நினைத்த நிலையில் வசமாக சிக்கி உள்ளார்'' என்று கூறியுள்ளது.

    English Summary

    Oman Co pilot Hamim Al-Hamami has been arrested for assaulting an Indian pilot and attempting to hijack a Dubai-Tel Aviv flight. Ongoing interrogations are revealing a series of shocking details. It has come to light that he had previously planned to hijack an Israeli flight and cause a crash last July, but abandoned the plan at the last minute because a close friend of his was working as a crew member on that flight and would have perished in the incident.