கண் பார்வையை பறிக்கும் ஒளி! அதிகாலையில் சவுதியில் விழுந்த ஏவுகணைகள்.. ஹவுதி வெறியாட்டம்

  • ரியாத்: மத்திய கிழக்கில் அமெரிக்கா ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை இன்று அதிகாலை திடீரென சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல், ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் மத்திய கிழக்குப் போரில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மத்திய கிழக்கில் இப்போது நிலைமை மீண்டும் மோசமடைய ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் சவுதி- ஹவுதி இடையேயும் மோதல் தீவிரமடைந்துள்ளது.

    Advertisement

    திடீர் தாக்குதல்

    சவுதி அரேபியாவின் ஜசான் மற்றும் யான்பு மாகாணங்களில் உள்ள மக்களுக்கு, உள்ளூர் நேரப்படி காலை சுமார் 6.10 மணியளவில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்த போதிலும், சற்று நேரத்திற்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக சவுதி அரசு தெரிவித்தது.

    இதற்கிடையில் ஏமனை சேர்ந்த ஹவுதி குழு, சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள ஜிசான் நகரை ஏவுகணைகள் மூலம் குறிவைத்து தாக்கியது நாங்கள் தான் என தங்களது டெலிகிராம் சேனல் மூலம் அறிவித்துள்ளனர். செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், சவுதியின் முக்கிய துறைமுகப் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதை குறிவைத்தே இப்போது ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது.

    Advertisement

    செங்கடலில் தாக்குதல்

    கடந்த வெள்ளிக்கிழமை ஏமனில் தாங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹொடெய்தா மாகாணத்தை சவுதி தாக்கியதாகவும் அதற்கு பதிலடியாகவே இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்பே, சவுதியின் செங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட போவதாக ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.. மேலும், அந்த துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் தாக்குவோம் என்றும் அறிவித்திருந்தது. அந்த எச்சரிக்கைக்கு பின்னர், சவுதியுடன் தொடர்புடைய இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதல் காரணமாக, ஏற்கனவே மத்திய கிழக்கு சப்ளை செயின் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி, அமெரிக்கா ஈரான் மோதலால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏன் முக்கியம்

    ஹர்முஸை தவிர்க்கும் விதமாகவே சவுதி அரேபியா தனது செங்கடல் துறைமுகமான யான்பு வழியாக தினமும் பல லட்ச்ம பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்கனவே ஹர்முஸ் முடங்கியுள்ள நிலையில், செங்கடலிலும் பதற்றம் அதிகரித்துள்ளது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வைக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.. இந்த போர் பதற்றம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இப்போது அது கிட்டத்தட்ட 90 டாலரை தொட்டுவிட்டது.

    Advertisement

    போர் பதற்றம்

    சவுதிக்கும் ஏமனில் உள்ள ஹவுதிக்கும் இடையே நீண்ட காலமாகவே போர் பதற்றம் இருந்து வருகிறது. இப்போது இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தாலும், தாக்குதல் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, ஈரானுக்கு எதிராக போர் ஆரம்பித்தவுடனேயே மத்திய கிழக்கு முழுக்க பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    ஹவுதி அமைப்பை பொறுத்தவரை அது ஈரானின் முக்கிய ஆதரவாளராக இருக்கிறது. மேலும், ஹவுதிக்கு ஈரானிடம் இருந்து தொடர்ந்து நிதியுதவியும் வருகிறது. இதன் காரணமாகவே ஈரானுக்கு ஒன்று என்றால் ஹவுதி முதல் ஆளாக களத்திற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

    English Summary

    Yemen Houthi rebels have claimed responsibility for a missile attack targeting Saudi Arabia(சவுதியில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பதற்றம்): Raising Saudi Arabia tension latest news in tamil.