துபாய்: ஹவுதிகள் நடத்தும் தாக்குதலால் சவுதி அரேபியா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவின் முக்கியமான ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஹவுதிகள் நடத்திய தாக்குதலின்போது இந்தியர் காயமடைந்துள்ளார்.
சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் வயல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்றைய தினம் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஷைபா எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த தாக்குதலை சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இந்த தடுப்பு நடவடிக்கையின்போது ஏவுகணையின் பாகங்கள் சிதறி விழுந்தன. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த 2 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 2 பேரில் ஒருவர் இந்தியர் என சொல்லப்படுகிறது. இதுபற்றி சவுதி அரேபியாவின் எரிசக்தி துறையின் அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், ''ஏவுகணை தாக்குதலை முறியடித்தபோது ஷைபா எண்ணெய் வயலுக்கு வெளியேய நின்ற ஒப்பந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த 2 பேர் பலியாகி உள்ளனர். இன்னொருவர் பாகிஸ்தான்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. '' இன்று ஷைபா எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமடைந்து இருப்பதை அறிந்துள்ளோம். சவுதி அரேபியா அதிகாரிகளுடன் தொட்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். பிற விவரங்களுக்காக கா்ததிருக்கிறோம். காயமடைந்த இந்தியருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்'' என கூறப்பட்டுள்ளது.