துபாய்: துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த இந்திய பெண் ஒருவர், அந்த நகரத்தை சுற்றி பார்ப்பதற்கு பதிலாக அங்கேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த மக்களை பார்த்தபோது தனக்கு கிடைத்த அனுபவம், மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் இருந்து மக்கள் ஏன் துபாய்க்கு வருகிறார்கள் என்பதை அந்த ஒரு மணி நேரத்தில் உணர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயரமான கட்டிடங்கள், பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள், நவீன உள்கட்டமைப்பு, ஆடம்பரமான வாழ்க்கை முறை என துபாய் என்றாலே அதன் பிரம்மாண்டம் தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், முதல் முறையாக துபாய் சென்ற இந்திய பெண் ஒருவருக்கு அங்குள்ள கட்டிடங்களையும் சுற்றுலா தலங்களையும் விட மக்களின் வாழ்க்கை முறையே தன்னை அதிகமாக கவர்ந்தாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ஷுபாங்கி ஜனன், துபாய் மாலில் எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் துபாய்க்கு முதல் முறையாக சென்றபோது தனக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். துபாய் மாலுக்கு சென்ற ஷுபாங்கியும் அவரது கணவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே அமர்ந்திருந்துள்ளனர். பொதுவாக நாம் எங்காவது சுற்றுலா சென்றால்.. அந்த இடத்தை சுற்றி பார்க்கவே விரும்புவோம். ஆனால் இந்த தம்பதி துபாயின் பிரபலமான இடங்களை சுற்றி பார்ப்பதற்கு பதிலாக.. அந்த நேரத்தை மக்களை கவனிப்பதிலேயே செலவிட்டுள்ளனர். மக்கள் எப்படி நடந்து செல்கிறார்கள், ஒருவருக்கொருவர் எப்படி பேசி கொள்கிறார்கள், தங்களை சுற்றியுள்ளவர்களிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதைக் கவனித்ததாக ஷுபாங்கி தெரிவித்துள்ளார். முதல் முறையாக துபாய் வந்திருந்தாலும், அங்குள்ள அன்றாட வாழ்க்கை மற்றும் மக்களின் செயல்பாடுகள் தங்களது கவனத்தை ஈர்த்ததாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக துபாய் மாலில் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள், நகைகள், காலணிகள் மற்றும் கைப்பைகள் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஷுபாங்கி தெரிவித்துள்ளார். மக்கள் தங்களை எப்படி காட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் அவர்களின் நேர்த்தியான உடைகளையும் தான் கவனித்ததாக அவர் கூறியுள்ளார். அங்கு வருவோர் ஆடைகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிந்தாலும், அனைவரிடமும் ஒரு விஷயத்தை பொதுவாக பார்க்க முடிந்ததாம். அதாவது அங்கிருந்த அனைவருமே தங்களை நேர்த்தியாக தங்களை காட்டிக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் இருந்ததை பார்க்க சுவாரஸ்யமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நமது மக்களிடம் இது சற்று மிஸ் ஆவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "நாங்கள் துபாயை சுற்றி பார்க்கவே சென்றோம். ஆனால், அதற்கு பதிலாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காபியுடன் அமர்ந்து மக்களை பார்த்துக் கொண்டிருந்தோம். அது பல பாடங்களை உணர்த்தியது என்பதே உண்மை. துபாய் நகரத்தின் கட்டிடங்கள், மால்கள் மற்றும் பிரம்மாண்டங்களை விட, அங்கு இருக்கும் மக்களின் அன்றாட செயல்பாடுகளே தங்களை அதிகம் ஈர்த்தது" என்றார். துபாய் என்றாலே ஆடம்பரம் மற்றும் பிரம்மாண்டம் நிறைந்த நகரம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், அந்த நகரத்தை நேரில் பார்த்தபோது தனக்கு அதைவிட வித்தியாசமான அனுபவம் கிடைத்ததாக ஷுபாங்கி தெரிவித்துள்ளார். இது மற்றவர்களுக்கு சிறிய விஷயம் போல தெரிந்தாலும்.. தனக்கு மிக பெரிய உத்வேகத்தை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். துபாயில் இருக்கும் மக்களின் அந்த தன்னம்பிக்கை தான் துபாய் இந்தளவுக்கு உச்சத்தில் பறக்க முக்கிய காரணமாக இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.துபாயில் இந்தியர்
"அந்த ஒரு மெசேஜ்.." அடுத்து 9 துண்டுகளாக வெட்டப்பட்ட கர்நாடக இளைஞர்.. மனைவி, மகன் எங்கே? மர்மம்
வாழ்க்கை முறை
கருத்து
திடீரென துபாய் பறக்கும் இந்தியர்கள்.. திரும்பி வரும்போது எல்லார் கையிலும் இருப்பது ஒரே விஷயம் தான்!
தன்னம்பிக்கை