திடீரென துபாய் பறக்கும் இந்தியர்கள்.. திரும்பி வரும்போது எல்லார் கையிலும் இருப்பது ஒரே விஷயம் தான்!

  • துபாய்: கடந்த சில நாட்களாகவே துபாய் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும் இவர்கள் ஓரிரு நாட்களில் அமீரகத்திற்கு சென்று திரும்பிவிடுகிறார்கள். அப்படி திரும்பும் அனைத்து இந்தியர்களின் கைகளிலும் ஒரு விஷயம் மட்டும் தவறாமல் இருக்கிறது.. அது என்ன மேட்டர்.. அப்படியென்ன விஷயம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    பொதுவாக புதிய போன் வாங்க வேண்டும் என்றால், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விலையை ஒப்பிட்டு பார்த்து, சலுகைக்காக காத்திருப்பது தான் வழக்கம். ஆனால், புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்க சில இந்தியர்கள் வேறு வழியை தேர்வு செய்துள்ளனர். சொல்லப்போனால் இதுதான் பெஸ்ட் வழியும் கூட!

    Advertisement

    ஐபோன்

    அவர்கள் விமானத்தில் ஏறி நேராக துபாய்க்கே சென்று ஐபோன் வாங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இந்தியாவை விட அமீரகத்தில் புதிய ஐபோன் மாடல்களின் விலை கணிசமாக குறைவாக இருப்பதுதான். விமான டிக்கெட் மற்றும் விசா செலவுகளை சேர்த்த பிறகும் துபாயில் போனை வாங்குவது லாபமாக இருப்பதாக சில இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

    செப்டம்பர் 18ஆம் தேதி துபாய் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ விற்பனை தொடங்கியது. வழக்கம்போல ஏராளமானோர் புதிய ஐபோன் வாங்க குவிந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த பலரும் இந்த கூட்டத்தில் இருந்தனர். மும்பையை சேர்ந்த அமன் சோலங்கி என்பவர், இந்தியாவை விட துபாயில் ஐபோன் வாங்கினால் விமான டிக்கெட் மற்றும் விசா செலவையும் சேர்த்தாலும் குறைவாகவே செலவாவதாக கூறியுள்ளார்.

    Advertisement

    அமீரகம்

    இது குறித்து அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காரணமாக ஐபோன் விலை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் துபாய்க்கும் இடையே தனது போனுக்கு மட்டும் சுமார் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை வித்தியாசம் இருப்பதாகவும், குடும்பத்தினருக்காக மேலும் இரண்டு ஐபோன் ப்ரோ மேக்ஸ் போன்களை வாங்க வேண்டி இருந்ததால் துபாய் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    விலை வித்தியாசம்

    அமீரகத்தில் ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை Dh5,099 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.1.33 லட்சம். ஆனால் இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆக உள்ளது. அதாவது சுமார் ரூ.33,000 அதிகம். அதேபோல், துபாயில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலை Dh5,499. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1.42 லட்சம். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,79,900. இதனால் சுமார் ரூ.38,000 விலை அதிகம். இரண்டு மாடல்களுமே 256GB முதல் 2TB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

    Advertisement

    விலை குறைவு

    கேரளாவைச் சேர்ந்த முகமது சயீதும் துபாயில் ஐபோன் வாங்கியுள்ளார். குடும்பத்தினரை சந்திக்க ஏற்கனவே துபாய் வந்திருந்த அவர், இந்தியா மற்றும் அமீரகத்தில் விலையை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு அங்கேயே புதிய ஐபோன் வாங்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம் சுமார் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சேமிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் காரணமாக ஐபோன் விலை அதிகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    English Summary

    Some Indian buyers are travelling to Dubai to purchase the iPhone 18 Pro and iPhone 18 Pro Max because of the price difference(துபாயில் ஐபோன் வாங்குவது): iPhone 18 Pro Dubai latest news in tamil.