துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அமெரிக்க அரசு உடனடியாக வெளியேற்றி வருகிறது. அமெரிக்க அதிகாரிகளை குறிவைத்து ஈரான் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது?
மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சவூதி அரேபியா, லெபனான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தூதரகங்களில் உள்ள முக்கியமில்லாத பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜே கிளேட்டன், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு அக்டோபர் 23 அன்று அனுப்பிய ரகசிய குறிப்பில் இந்த அச்சுறுத்தல் குறித்து விரிவாக எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, உலகின் வேறு சில பகுதிகளிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் மிக தீவிரமான சதி திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அந்த திட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க அதிகாரிகளுக்கு இரண்டு வழிகளில் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகளை ஈரான் அரசு அதிகரித்துள்ளது. ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களை நோக்கி அவர்கள் நடத்திய தாக்குதல்கள் ஏற்கனவே பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல்கள் அடுத்தடுத்து அண்டை நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த காரணங்களால் அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, அவசியமான அதிகாரிகள் மட்டுமே தூதரகத்தில் இருப்பார்கள் என்றும் மற்றவர்கள் தற்காலிகமாக தாயகம் திரும்புவார்கள் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதே சமயம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களில் தற்போதைக்கு பணியாளர் குறைப்பு செய்யப்படவில்லை. இந்த திடீர் வெளியேற்ற உத்தரவால் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானுடன் மோதல் ஏற்பட்டபோதும் அவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் நிலைமை சீரடைந்ததும் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே திரும்பினர். இப்போது மீண்டும் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திடீரென வெளியேற சொல்வதால் தங்குமிடம், குழந்தைகளுக்கான பள்ளி சேர்க்கை மற்றும் பயணச் செலவுகள் போன்ற விஷயங்களில் சரியான வழிகாட்டலும் பண உதவியும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தூதரக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ஈரான் சமாதான பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், அந்த நாட்டின் மீது மீண்டும் ஒரு முறை அமெரிக்க ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ஈரான் மீது உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் விரைவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் பாயலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அமெரிக்க தூதர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவது, மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.தூதர்கள் வெளியேற்றப்பட காரணம் என்ன?
குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தி
பாகிஸ்தானுடன் பேசுவதால்.. இந்தியாவுக்கு ஒன்னும் பாதிப்பு வராது! உத்தரவாதம் கொடுத்த அமெரிக்கா!
போர் மூளும் அபாயம் உள்ளதா?