சவுதி அரேபியாவில் பற்றி எரிந்த விமானங்கள்.. ஹவுதி தாக்குதலுக்கு நடுவே அதிர்ச்சி!

  • ரியாத்: சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து ஏமன் ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு நடுவே சவுதி அரேபியா தலைநகர் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ள விமானங்கள் தீப்பிடித்து எரிந்ததது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன.

    Advertisement

    சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இதில் ரியாத் விமான நிலையத்தில் ஒருவர், அபா விமான நிலையத்தில் 2 பேர் என்று மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

    விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் விமானங்கள் தீப்பற்றி எரிவது போல் அந்த வீடியோ உள்ளது. இந்த வீடியோ ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 3 விமானங்கள் தீயில் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் (சவுதியா) நிறுவனத்துக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    இருப்பினும் இந்த விமானங்கள் எப்படி தீப்பற்றி எரிந்தன? என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. இதுபற்றி சவுதி அரேபியா தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் ஹவுதிகளின் ஏவுகணை தாக்குதலால் தான் இந்த விமானங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Yemen's Houthi rebels have been launching missile attacks targeting airports in Saudi Arabia. Amidst these attacks, videos have surfaced online showing aircraft engulfed in flames at the international airport in the Saudi capital, Riyadh.