துபாய்: சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே மோதல் உச்சம் தொட்டுள்ளது. இதுவரை விமான நிலையங்களை குறிவைத்து தாக்கி வந்த ஹவுதிகள் தற்போது சவுதி அரேபியாவின் இதயத்தில் அடிக்க தொடங்கி உள்ளனர். சவுதி அரேபியா பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தில் தற்போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இருதரப்புக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
சவுதி அராம்கோ என்பது சவுதி அரேபியா மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் ஆகும். தஹ்ரான் நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனம் சவுதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமானது.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. சவுதி அரேபியாவின் எண்ணெய், இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் இந்த நிறுவனம் தான் 'டாப்'பில் உள்ளது. சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தில் முக்கிய தூணாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஹவுதிகள் இந்த நிறுவனத்தின் தலைமையகத்தை குறிவைத்து தாக்கி உள்ளனர். நேற்று நள்ளிரவில் பாலிஸ்டிக் ரக ஏவுகணையானது இந்த தலைமையகத்தின் மீது விழுந்து தாக்கியது. இதனால் அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்தது. மொத்தம் 3 தளங்கள் வரை சேமதடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி தஹ்ரான் நகரில் பறந்து வந்த ஏவுகணையை சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இதில் சிதறிய ஏவுகணைகளின் கழிவுகள் குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றி கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையேயான மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் முதல் ஹவுதிகள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளேதோடு, 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அதன்பிறகு சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஹவுதிகள் அறிவித்தன. இதற்கான வார்னிங்கையும் செய்திருந்தன. சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்த ஹவுதிகள் நள்ளிரவில் சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமயகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதல் காரணமாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடும் கோபமடைந்துள்ளார். ஹவுதிகளுக்கு கடும் வார்னிங்கை செய்துள்ளார். இதுபற்றி அவர், ''சவுதி அரேபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஹவுதிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என்று வார்னிங் செய்துள்ளார். இந்த வார்னிங் மற்றும் ஹவுதிகளின் தொடர் தாக்குதால் சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையேயான மோதல் உச்சம் தொட்டுள்ளது.திணறும் சவுதி அரேபியா! பாகிஸ்தான் – துருக்கி உதவினாலும் ஹவுதிகளிடம் அடிவாங்குவது ஏன்? பின்னணி
சவுதியை காக்க டிரம்ப் போடும் உத்தரவு.. முழுவீச்சில் களமிறங்கும் இஸ்லாமிய நாடு? ஹவுதிகளுக்கு சிக்கல்