மெக்காவில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு! சவுதியின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹவுதி?

  • துபாய்: சவுதி வான்வெளியில் பறந்த சவுதி அரேபியாவிற்கு சொந்தமான எப்-15 (F-15) போர் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாக ஹவுதி அமைப்பினர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

    Advertisement

    மத்திய கிழக்கு நாடுகளில் இப்போது போர் சூழல் மிக வேகமாக மாறி வருகிறது. ஏமன் நாட்டில் இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

    Advertisement

    இந்நிலையில், சவுதி வான்வெளியில் பறந்த சவுதி அரேபியாவிற்கு சொந்தமான எப்-15 போர் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாக ஹவுதி அமைப்பினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். தங்களுடைய சொந்த தயாரிப்பு ஆயுதங்களைக் கொண்டே இந்த போர் விமானம் தாக்கப்பட்டதாக அவர்களின் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

    நேற்று சவுதி அரேபியாவின் புனித நகரான மெக்காவை குறிவைத்து ஹவுதி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அந்த ட்ரோனை சவுதி பாதுகாப்புப் படையினர் மெக்காவிற்குள் நுழைவதற்கு முன்பே தடுத்து அழித்துவிட்டதாகக் கூறினர். இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் பாதுகாப்பில் கை வைத்தால் அது ரெட் லைன் கோடு, இதற்குப் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் சவுதி கூட்டணிப் படைகள் எச்சரித்துள்ளன.

    Advertisement

    ஆனால், மெக்கா நகரத்தின் மீது தாங்கள் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை என்று ஹவுதி அமைப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் சவுதி வான்வெளியில் பறந்த சவுதி அரேபியாவிற்கு சொந்தமான எப்-15 (F-15) போர் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாக ஹவுதி அமைப்பினர் அதிரடியாக அறிவித்துள்ளனர்

    சவுதியின் எண்ணெய் ஆலை மீது அட்டாக்

    தங்களுடைய தாக்குதல்கள் அனைத்தும் சவுதியின் எண்ணெய் ஆலைகள் மற்றும் ராணுவத் தளங்களை மட்டுமே குறிவைப்பதாகவும், அவை புனித தலங்களிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    Advertisement

    இந்த தாக்குதல் முயற்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டு அமைப்பான ஓ.ஐ.சி (OIC) உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த திடீர் மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

    மறுபுறம், செங்கடல் பகுதியில் உள்ள முக்கியமான பாப் எல்-மந்தேப் நீரிணை பகுதியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கும், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிக முக்கியமான பாதையாகும். இந்த நீரிணையை மூடுவது உலகப் பொருளாதாரத்திற்கே பேரிழப்பாக முடியும் என்று கத்தார் போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன. செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், சவுதி அரேபியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடியுள்ளது.

    Advertisement

    இந்த தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவதுடன், கச்சா எண்ணெய் விலையும் உலக அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரசு தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்க தயங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    English Summary

    Saudi F-15 Fighter Jet Shot Down by Yemen Houthis After Mecca Drone Attack Alert