துபாயில் தேசியக் கொடி தின விழா: மாணவர்களின் உற்சாக கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்!

  • துபாய்: நவம்பர் 3, 2026, செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடி தினத்தை முன்னிட்டு, கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் துபாய் பப்ளிக் லைப்ரரியின் ஒத்துழைப்புடன், ஹோர் அல் அன்ஸ் துபாய் பப்ளிக் லைப்ரரியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேசியக் கொடி தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    Advertisement

    இந்நிகழ்ச்சியை கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் ஒருங்கிணைத்தார்.
    சிறப்பு விருந்தினராக உலகளாவிய அமைதிச் செயல்பாட்டாளரும், பிரிட்டிஷ் தொழில்முனைவோரும், World Humanitarian Drive (WHD) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் அப்துல் பாசித் சையத் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். நிகழ்வில் கல்வியாளர், கல்லிடைக்குறிச்சி மொய்தீன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

    Advertisement

    நிகழ்ச்சியின் தொடக்கமாக, துபாய் பப்ளிக் லைப்ரரியின் மேலாளர் திருமதி சுமையா அவர்களும், சிறப்பு விருந்தினர் டாக்டர் அப்துல் பாசித் சையத் அவர்களும் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், தேசிய கொடி குறித்த வினாடி வினா, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உற்சாகமான செயல்பாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

    சிறப்பு விருந்தினர் டாக்டர் அப்துல் பாசித் சையத் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒற்றுமை, தேசப்பற்று, சகிப்புத்தன்மை, மனிதநேயம் மற்றும் பல்வேறு கலாச்சார மக்களை அரவணைக்கும் நாட்டின் உயரிய பண்புகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இவரது பேச்சு மாணவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

    Advertisement

    கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியின் நிறைவில், இந்த விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய துபாய் பப்ளிக் லைப்ரரி நிர்வாகத்தினர், சிறப்பு விருந்தினர் டாக்டர் அப்துல் பாசித் சையத் அவர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

    English Summary

    UAE Flag Day Celebrated with Grand Spirit by Green Globe and Dubai Public Library