துபாய் டூ அபுதாபி.. தூக்கத்தை இழந்த மக்கள்.. 48 மணிநேரத்தில் 6 ட்ரோன் தாக்குதல்!

  • துபாய்: ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கடந்த வாரம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்தியாவுக்கு வந்தார். இவருடைய இந்திய பயணம் முடிந்து பின்பு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    Advertisement

    ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வான்பாதுகாப்பு அமைப்பு கடந்த 48 மணி நேரத்தில் 6 ட்ரோன்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த ட்ரோன்கள் நாட்டின் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு இடங்களை இலக்காகக் கொண்டு வந்ததாக UAE பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இந்தத் தாக்குதல் முயற்சிகளில் எந்தவித உயிரிழப்போ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று UAE அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் வகையில் UAE-யின் பாதுகாப்பு அமைப்பையும், ராணுவத்தையும் உச்சக்கட்ட எச்சரிக்கையில் வைத்துள்ளது.

    குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை (ஞாயிறு) நடைபெற்ற ஒரு ட்ரோன் தாக்குதல் முயற்சியில், UAE-யின் முக்கிய அணு மின் நிலையமான பராகா அணு மின் நிலையம் (Barakah Nuclear Facility) இலக்காக வைக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த ட்ரோன்கள் ஈராக் பகுதியில் இருந்து வந்தவை என்று UAE பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வேளையில், இந்த ட்ரோன் தாக்குதல் வளைகுடா பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதேவேளையில் இந்த 6 ட்ரோன்களை ஈரான் தாக்கியதாக இதுவரையில் அறிவிப்பு வெளியிடவில்லை.

    இதேவேளையில் அமெரிக்காவில் மீண்டும் ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலின் மூத்த பாதுகாப்பு துறை தலைவர்கள் ஆலோசனை செய்வதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

    மேலும் இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து UAE அரசு முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 48 மணிநேரத்தில் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடக்கும் காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தின் எல்லையோர மக்கள் தூக்கத்தை தொலைத்து பீதியில் உள்ளனர்.

    English Summary

    The UAE Defence Ministry successfully intercepted six drones targeting civilian areas and vital infrastructure in the last 48 hours, with one drone specifically aimed at the Barakah Nuclear Facility originating from Iraq. கடந்த 48 மணி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 ட்ரோன்கள் தாக்குதல் முயற்சிகளை வான்பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியது.