தற்காப்பு கலை சொல்லி தரேன் வாங்க.. இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு UAE அதிபர் ஆஃபர்! என்ன நடந்தது?

  • துபாய்: 'ஃப்ளைதுபாய்' விமானத்தில் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமியால் தாக்கப்ப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருது வழங்கி கவரவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் செய்க் முகமது பின் ஜயால் அல் நஹ்யான், ஸ்மித் மச்சாருக்கு தற்காப்பு கலை கற்று தருவதாக கூறிய வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு கடந்த செப்டம்பர் 30ம் தேதி 'ஃப்ளைதுபாய்' விமானம் புறப்பட்டது. அப்போது இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை 'காக்பிட்' கோடரி எடுத்து தாக்கிவிட்டு ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி விமானத்தை கடத்த முயன்றான். இது முறியடிக்கப்பட்டது.

    Advertisement

    இதனால் விமானத்தில் 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என்று 180 பேரும் பாதுகாப்பாக தரையிறங்கினர். தலை உள்பட உடல் முழுவதும் படுகாயமடைந்து இருந்தாலும் ஸ்மித் மச்சார் திறமையாக செயல்பட்டதால் தான் இந்த விமானம் விபத்தில் சிக்காமல் தப்பியது.

    ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்மித் மச்சாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. நேற்று ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் செய்க் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் சார்பில் First Class Order of Zayed II என்ற விருது வழங்கப்பட்டது.

    Advertisement

    இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் செய்க் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் ஸ்மித் மச்சார் இடையே நடந்த உரையாடல் தொடர்பான வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    அந்த வீடியோவில் அதிபர் செய்க் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான், ஸ்மித் மச்சாரின் தலையின் பின்பகுதியில் போடப்பட்டு இருந்த தையலை பார்த்தார். அதன்பிறகு அவரிடம் நலம் விசாரித்ததோடு, கையில் இருந்த காயத்தை பார்த்து இது குணமாக எவ்வளவு காலம் எடுக்கும்? என்று கேட்டார்.

    Advertisement

    அதற்கு ஸ்மித் மச்சார், ''2 மாதங்கள் வரை ஆகலாம்'' என்றார். அப்போது அதிபர் , ''எனக்கு ஒரு ஐடியா இருக்கு. நீங்கள் முழுவதுமாக குணமடைந்த பிறகு உங்களுக்கு ஜியு - ஜிட்சு பயிற்சி தர விரும்புகிறேன்'' என்றார். ஜியு - ஜிட்சு என்பது ஒரு தற்காப்பு கலையாகும்.

    ஒருவர் திடீரென்று தாக்க வரும்போது அவரிடம் இருந்து தப்பிக்க இது உதவும். ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி திடீரென்று தான் விமானத்தின் காக்பிட்டில் ஸ்மித் மச்சாரை தாக்கினார். இதனால் தற்காப்பு கலை கண்டிப்பாக ஸ்மித் மச்சாருக்கு தேவை என்பது போல் அதிபர் செய்க் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் கூறினார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

    Advertisement

    அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜியு - ஜிட்சு தற்காப்பு கலை கற்று கொடுக்கப்படுகிறது. இதறகாக தனியாக சம்மேளம் உள்ளது. இந்த சம்மேளனம் என்பது அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் வழிக்காட்டுதலின்படி தான் இயங்கி வருகிறது.

    English Summary

    Indian Pilot Smit Machchhar: Indian pilot Smit Machchhar, who was attacked by Omani co-pilot Hamam Al Hamami aboard a ‘flydubai' flight, has been honored with a prestigious award from the United Arab Emirates. Meanwhile, a video has surfaced and is going viral, in which the President of the UAE, Sheikh Mohamed bin Zayed Al Nahyan, offers to teach Smit Machchhar martial arts.