துபாய்: துபாய்க்கு சுற்றுலா, வேலை அல்லது ஏற்கனவே அங்கு இருக்கும் குடும்பத்தினரை சந்திக்க செல்ல திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பை அமீரகம் வெளியிட்டுள்ளது. அதில் துபாய் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய 7 காரணங்களையும், மீண்டும் விண்ணப்பிக்கும் முன் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகளையும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு, அதிலும் குறிப்பாக அமீரகம் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இருப்பினும், அமீரகம் செல்ல விரும்பி விசா கோரி விண்ணப்பிப்போரின் விசா எப்போதும் ஏற்கப்படுவதில்ல. சில சமயங்களில் விசா நிராகரிக்கப்படும். கடைசி நேரத்தில் இதுபோல விசா நிராகரிக்கப்படுவது பயணிகளுக்கு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.
இதற்கிடையே அமீரக அரசு இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் விசா நிராகரிக்கப்படுவதற்கு குற்றப் பின்னணி மட்டுமே காரணமல்ல. விண்ணப்பப் படிவத்தில் சிறிய தவறுகள் அல்லது தெளிவில்லாத ஆவணங்கள் கூட விசா நிராகரிக்கப்பட காரணமாக அமைந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா நிராகரிப்புக்கான 7 முக்கிய காரணங்களையும் அது வெளியிட்டுள்ளது. இந்த 7 காரணங்களுக்காகவே அமீரக விசா பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆவணங்கள் தெளிவாக இல்லாதது போன்ற நிர்வாக ரீதியிலான தவறுகள் கூட விசா மறுப்புக்கு காரணமாக இருக்கும் என்பதை அமீரகம் எச்சரித்துள்ளது. மேலும், விசா நிராகரிக்கப்படுவதை தவிர்க்க விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகளையும் அமீரக அரசு வெளியிட்டுள்ளது. Proof of Funds ஆவணத்தை சமர்ப்பிக்க பலரும் மறந்து விடுவது அல்லது அதற்கு போதுமான ஆதாரங்களை வழங்காததே விசா மறுக்கப்பட முக்கிய காரணமாக இருப்பதாக அமீரக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே விசா நிராகரிக்கப்பட்டவர்கள், அதே விண்ணப்பத்தை எந்த மாற்றமும் செய்யாமல் மீண்டும் சமர்ப்பிப்பதால் பலன் கிடைக்காது என்றும் அமீரக அரசு தெரிவித்துள்ளது. முதலில் எதற்காக உங்கள் விசாவை நிராகரித்தார்கள் என்பதை கண்டறிந்து, அதை சரிசெய்த பிறகே புதிய விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. துபாய் உட்பட அமீரக நாடுகளுக்கு இந்தியர்கள் அதிகம் செல்லும் நிலையில், அவர்களுக்கு இந்த அறிவிப்பு உதவும்! சரியான ஆவணங்கள், துல்லியமான தகவல்கள் மற்றும் போதுமான நிதி ஆதாரங்களை வழங்கினால் விசா கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்!அமீரக விசா
7 காரணங்கள்
விசா கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
கவனிக்க வேண்டியது