துபாய்: ஈரானின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் முடக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் வருகிறது. இந்தச் சூழலில் தான் ஈரான் தங்கள் நாட்டை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக குற்றம்சாட்டிய அமீரகம், ஈரானுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் காலவரையின்றி நிறுத்துவதாக அறிவித்தது. அமீரகத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் இன்னும் நிலைமை முழுமையாக சீராகவில்லை. அமெரிக்கா ஈரான் நாடுகள் நேரடியாக தாக்கிக் கொள்வது நின்றிருந்தாலும் மோதல் முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில் தான் தங்களை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமீரகம் குற்றஞ்சாட்டியுள்ளது..
இதனால் ஈரான் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால், ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. இதற்கு பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம்! ஏனென்றால் ஈரானுக்கு எதிராக பொருளாதார அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே அவர் அமீரகத்திற்கு அழுத்தம் கொடுத்து இந்த நடவடிக்கையை எடுக்க வைத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டாலும், ஈரான் தனது சர்வதேச வர்த்தகத்தை முழுமையாக இழக்கவில்லை. அண்டை நாடுகள், இடைத்தரகர்கள் மூலம் ஈரான் தொடர்ந்து வர்த்தகம் செய்தே வந்தது. அதில் அமீரகத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இரு நாடுகளும் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தன. 2023ஆம் ஆண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே 6.2 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இதில் அமீரகத்தில் இருந்து ஈரானுக்கான ஏற்றுமதி சுமார் 5.8 பில்லியன் டாலராகும். இதுவே மிக பெரிய நம்பர் தான். ஆனால், இதை விட வர்த்தகத்தில் அமீரகம் ஈரானுக்கு முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் மேற்கத்திய நிறுவனங்கள் ஈரானுடன் நேரடியாக வர்த்தகம் செய்வதை தவிர்த்த நிலையில், அமீரகம் வழியாகவே ஈரான் தனக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தது. ஈரானின் இறக்குமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அமீரகம் வழியாக சென்றது. ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உயிர்நாடியாக இருக்கும் வர்த்தக மற்றும் நிதி வழிகளை துண்டிப்பதே டிரம்பின் திட்டம்! ஈரானுக்கு தொடர்ந்து பொருளாதார உதவி அல்லது வர்த்தகம் செய்யும் நாடுகள், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மிக பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அதன்படி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த தகவல் தான் அமீரகத்தை யோசிக்க வைத்துள்ளது. ஈரான் சந்தையில் கிடைக்கும் வருமானம் முக்கியமா, அல்லது அமெரிக்கா முக்கியமா என்று கேள்வி வந்ததும் அமீரகம் அமெரிக்கா பக்கமே சாய்ந்துள்ளது. இதன் காரணமாகவே ஈரான் உடனான மொத்த வர்த்தகத்தையும் நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரம் அமீரகம் இல்லை என்பதால் ஈரான் பொருளாதாரமே முடங்கிவிடும் என சொல்ல முடியாது. ஏனென்றால் ஈரான் பொருளாதாரம் ஒரே ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கவில்லை. சீனா தான் ஈரானிடம் இருந்து அதிகபட்ச கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. அமெரிக்காவின் தடைக்கு எல்லாம் சீனா துளியும் பயப்படாது. எனவே, அமெரிக்காவின் இந்த பிரஷர் அணுகுமுறை ஈரானுக்கு சிக்கலை கொடுத்தாலும் அது முழுமையாக ஈரானை முடக்கிவிடாது. அப்படி முடக்க வேண்டும் என்றால் சீனாவை அமெரிக்கா தடுத்து நிறுத்த வேண்டும்! இந்த விவகாரத்தில் இந்தியாவும் சிக்கலான நிலையில் உள்ளது. இந்தியா ஈரான் இருதரப்பு வர்த்தகம் 2025ஆம் ஆண்டில் சுமார் 1.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியா ஈரானுக்கு பாஸ்மதி அரிசி, பழங்கள், காய்கறிகள் மற்றும் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. ஈரானிடமிருந்து உலர் பழங்கள், பருப்புகள், கனிமங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்தியா பெறுகிறது. ஆனால், அமெரிக்க எச்சரிக்கையால் இந்தியா தனது முடிவை மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.அமீரகம்
ஈரானுக்கு அமீரகம் ஏன் முக்கியம்?
டிரம்ப்
சீனா
இந்தியா