சொத்தையே எழுதி வைக்கணும் போல.. துபாயில் வண்டி ஓட்டும்போது “இந்த” 5 தவறுகளை செஞ்சடாதீங்க

  • துபாய்: ஐக்கிய அமீரகத்தில் எப்போதுமே சாலை விதிகள் மிக கடுமையாக பின்பற்றப்படும். அங்கு சிறிய தவறு செய்தாலும் மிக பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும். இதற்கிடையே அமீரகத்தில் வாகன ஓட்டிகள் செய்யவே கூடாத 5 தவறுகள் குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், காலை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரத்திலும், மாலை அழைத்துச் செல்லும் நேரத்திலும் சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கும். பள்ளி பேருந்துகள், மாணவர்கள் சாலையை கடப்பது, பெற்றோர்கள் குழந்தைகளை இறக்கிவிடுவது என பரபரப்பான சூழல் நிலவும். எனவே, வாகன ஓட்டிகள் கீழ்க்கண்ட 5 தவறுகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பெரிய தொகையை அபராதமாக கட்ட நேரிடும்.

    Advertisement

    1. பள்ளி பேருந்துகள்

    பள்ளி பேருந்துகளில் இருந்து மாணவர்கள் ஏறும்போதும் இறங்கும்போதும் 'Stop' சிக்னலை அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும்படி டிஸ்ப்ளே செய்யப்பட்டு இருக்கும். இந்த 'Stop' சிக்னல் தெரியும்போது அருகில் வரும் வாகனங்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மாணவர்கள் சாலையை கடக்கக்கூடும் என்பதால், பேருந்து புறப்படும் வரை காத்திருக்க வேண்டும். இதை மீறினால் Dh1,000, அதாவது ரூ.26,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், 10 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும்.

    2. பள்ளி பகுதிகள்

    பள்ளிகளுக்கு அருகில் கண்டிப்பாக குறைந்த வேகத்தில் தான் வாகனத்தை இயக்க வேண்டும். திடீரென மாணவர்கள் சாலையை கடக்கும்போது, அதை சமாளித்து, மாணவர்கள் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்றால் வாகனத்தை குறைந்த வேகத்திலேயே இயக்க வேண்டும். இதை மீறினாலும் Dh3,000, அதாவது ரூ.78,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

    Advertisement

    3. செல்போன் பயன்படுத்துவது

    வாகனம் ஓட்டும்போது மெசேஜ் பார்ப்பது, போன் பேசுவது அல்லது மேப் பார்க்க செல்போனை பயன்படுத்துவது கவனத்தை சிதறடிக்கும். பள்ளி பகுதிகளில் மாணவர்கள் திடீரென சாலையில் வரக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் அவசியம். செல்போன் பயன்படுத்தினால் Dh800 அபராதம் மற்றும் 4 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும்.

    4. வழிவிடாமல் செல்வது

    பள்ளி அருகிலுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலையை கடக்க சிறப்பு பகுதி உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த பகுதியில் அதிகளவில் மாணவர்கள் சாலையை கடப்பார்கள். எனவே, இங்கு ஓட்டுநர்கள் வேகத்தை குறைத்து, அவர்கள் முழுமையாக கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். விதிமீறலுக்கு Dh500 அபராதம் மற்றும் 6 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படலாம். மேலும், குழந்தையை இறக்கிவிட சாலையை கடக்கும் பகுதியில் வாகனத்தை நிறுத்தக் கூடாது. இதனால் மாணவர்கள் வாகனத்தைச் சுற்றியோ, மற்ற வாகனங்களுக்கு இடையிலோ சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    Advertisement

    5. சீட் பெல்ட் அணியாமல் செல்வது

    பள்ளி சில நிமிட தூரத்தில் இருந்தாலும் சீட் பெல்ட் அவசியம். திடீர் பிரேக் அல்லது விபத்து எந்த நேரத்திலும் ஏற்படலாம்.. அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை மீறினால் Dh400 அபராதம் மற்றும் 4 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படலாம். 10 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது 145 செ.மீ. உயரத்துக்கு குறைவானவர்கள் முன் இருக்கையில் அமரக்கூடாது. சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரித்தான சீட்டை தான் பயன்படுத்த வேண்டும். விதிமீறினால் Dh400 அபராதம் மற்றும் 4 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும்.

    English Summary

    UAE drivers must follow strict traffic rules, especially near schools(அமீரகத்தில் பின்பற்ற வேண்டிய டிராபிக் விதிகள்): UAE Traffic Rules latest news in tamil.