இந்தியர்களுக்கு சிக்கல்? அமீரகத்தில் வந்த மாற்றம்.. இனி ஒரு முறை இரண்டு முறை நல்லா யோசிங்க!

  • துபாய்: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து அமீரகம் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அமீரகத்திற்கு வருவோர் விசா பெறும் நடைமுறையில் அந்நாட்டு அரசு முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய விதியால் யாரெல்லாம் விசா பெறுவதில் சிக்கலை எதிர்கொள்வார்கள் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    வளைகுடா நாடுகளில் அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. எனவே, சூழலைப் பொறுத்து அமீரக அரசு விசா விதிகளில் தொடர்ச்சியாக மாற்றங்களைச் செய்து வருகிறது. இதற்கிடையே இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான அரைவல் விசா (visa-on-arrival) கொள்கையில் ஐக்கிய அமீரகம் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

    Advertisement

    விசா மாற்றம்!

    அதன்படி இந்த புதிய விதிகளின்படி, பிரிட்டன் குடியிருப்பு விசா மட்டுமே வைத்துள்ள இந்தியப் பயணிகள், இனி அமீரகத்திற்குள் நுழையும் போது அரைவல் விசா பெற முடியாது. அமீரக அரசு அறிவித்துள்ள இந்த புதிய விதிகள், எப்போது முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்ற தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும்போது, பிரிட்டன் குடியிருப்பு அனுமதியை மட்டுமே நம்பி அமீரகத்தின் 14 நாட்கள் அரைவல் விசா வசதியைப் பயன்படுத்தி வந்த இந்திய சுற்றுலாப் பயணிகள், அடிக்கடி பயணம் செய்வோர் மற்றும் பிஸ்னஸ் பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அதாவது பிரிட்டன் குடியிருப்பு விசாவை மட்டும் கொண்டுள்ள இந்தியர்கள், புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு 14 நாட்கள் அரைவல் விசா சலுகையைப் பெற முடியாது.

    Advertisement

    யாருக்கு சலுகை தொடரும்

    அதேநேரம் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்துள்ள இந்தியர்களுக்கு அரைவல் விசா சலுகையை ஐக்கிய அமீரகம் தொடர்ந்து வழங்குகிறது.. அமெரிக்கச் சுற்றுலா விசா, அமெரிக்க கிரீன் கார்டு, ஐரோப்பிய ஒன்றிய சுற்றுலா விசா, ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பு விசா வைத்துள்ள இந்திய பயணிகள் ஆன் அரைவல் விசாவை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

    இந்த ஆவணங்களைக் கொண்டுள்ள பயணிகள், தற்போதுள்ள விதிமுறைகளின்படி 14 நாட்கள் வரை அமீரகத்தில் தங்குவதற்கான அரைவல் விசா பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், இந்த தங்குமிட காலத்தைக் கூடுதலாக 14 நாட்களுக்கு நீட்டிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    புதிய விசா

    இந்த மாற்றங்களைத் தவிர, இந்தியர்களுக்குப் புதிதாக 60 நாட்கள் வரை செல்லுபடியாகும் அரைவல் விசா வசதியை வழங்குவது குறித்தும் ஐக்கிய அமீரகம் ஆலோசித்து வருகிறது. அதேநேரம் இதுவும் அனைத்து இந்திய பயணிகளுக்கும் கிடைக்காது. 14 நாள் அரைவல் விசா பெற தகுதியானவர்களுக்கு எந்தெந்த தகுதிகள் உள்ளதோ, அதே தகுதி வரம்புகள் தான் இதற்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த புதிய விசா நடைமுறை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

    பாதிப்பு

    இந்த புதிய விதிகளால்.. பிரிட்டன் குடியிருப்பு விசா மட்டுமே வைத்துள்ள இந்தியப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் இனி அமீரகத்திற்குப் பயணம் செய்வதற்கு முன்னதாகவே வழக்கமான அமீரக சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் அல்லது விமான நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது அவர்களே நேரடியாக விசா கோரி விண்ணப்பிக்கலாம்.

    Advertisement

    ஆன் அரைவல் விசா சலுகை நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு முன் தங்களின் விசா தகுதியை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே, அவர்களின் விசா நிலையை விமான நிறுவனங்கள் உறுதி செய்யும்.

    English Summary

    UAE has updated its visa-on-arrival eligibility rules for Indian passport holders(அமீரக விசா விதிகளில் வந்த மாற்றம்): UAE Visa-on-Arrival Rules latest news in tamil.