ரோபோக்களுக்கு கல்யாணம்.. திருமணம் முடிஞ்சதும் மாப்பிள்ளை ரோபோ போட்ட போஸ்ட் வேற லெவல்!

  • துபாய்: இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் திருமணம் செய்யவே நிறைய சவால்களை எதிர்கொள்ளும் சூழலில் AI தொழில்நுட்பத்தில் செயல்படும் பு சுனைதா என்ற பிரபலமான ஹியூமனாய்டு ரோபோவுக்கு திருமணமான செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ரோபோ தான் மிக அழகான மோசா என்ற ரோபோவை திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த திருமணம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    துபாயில் உருவாக்கப்பட்ட யூனிட்ரி ஜி-1 என்ற மனித உருவிலான ரோபோ மக்களிடையே மிகுந்த கவனம் பெற்றது. இந்த ரோபோ கடந்த ஆண்டு மனிதர்கள் போல சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றது சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து அறிந்த அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகமது பின் ராஷித், அல் மக்தூம் நேரில் அழைத்து அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.

    Advertisement

    இந்த மனித உருவ ரோபோ ஒவ்வொரு அசைவிலும் மனிதர்களைப் பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் மனித வடிவில் மனிதர்களின் செயல்களை செய்வது போல் உருவாக்கப்படும் இந்த ரோபோக்கள் 'ஹியூமனாய்டு ரோபோக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை ரோபோக்கள் ஆண், பெண் வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    மனிதர்களைப் போலவே குறிப்பிட்ட அனைத்து வேலைகளையும் இந்த ரோபோக்கள் செய்து வருகின்றன. இந்நிலையில் தான், மனிதர்களைப் போலவே இரு ரோபோக்களுக்கு துபாயில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அதாவது, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி 'பு சுனைதா' என்கிற ரோபோவுக்கும் 'மோசா' என்கிற ரோபோவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அமீரக பாரம்பரிய கந்தூரா உடையணிந்து வந்த பு சுனைதா என்கிற ரோபோ, கருப்பு நிற அபாயா அணிந்த மோசா என்ற ரோபோவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றன.

    Advertisement

    இது போதாதென்று, "இறைவனுக்கு நன்றி.. இன்று நான் மிகவும் அழகான மோசா ரோபோவை திருமணம் செய்து கொண்டேன்" என்று பு சுனைதா ரோபோ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இருப்பினும், இது சட்டப்பூர்வமான அல்லது மத ரீதியிலான திருமணம் அல்ல. இது ரோபோ தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய சுவாரசியமான நிகழ்வு மட்டுமே இதற்கிடையே, ரோபோக்களுக்கு கூட கல்யாணம் ஆகிறது என நம்ம ஊர் 90'ஸ் கிட்களின் புலம்பலும் கேட்கிறது.

    English Summary

    Dubai's internet-famous humanoid robot, Bu Sunaidah, has married another robot named Moza in a staged social media ceremony, and the viral post is leaving the internet amused, confused.