சவுதி அரேபியாவில் குவிக்கப்படும் போர் விமானங்கள்.. ஹவுதிகளுக்கு எதிராக பிரிட்டன் அதிரடி.. பின்னணி

  • துபாய்: சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவிற்கு உதவியாக பிரிட்டன் தனது போர் விமானங்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

    Advertisement

    சவுதி அரேபியா - ஏமன் ஹவுதிகள் இடையேயான மோதல் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மோதல் சவுதி அரேபியாவிற்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

    Advertisement

    சவுதி அரேபியா அமெரிக்காவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மற்றும் 'மெக்கா' ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான், துருக்கி உதவி செய்யும் என்று நம்பியது. ஆனால் இந்த 2 விஷயங்களும் கைக்கொடுக்கவில்லை.

    இதனால் ஹவுதிகள், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 20 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 14 பேர் இறந்துள்ளதோடு, 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பிற இடங்களில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து தாக்குதல் நடப்பதால் செய்வதறியாது சவுதி அரேபியா தவித்து வருகிறது. இந்நிலையில் தான் ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற பிரிட்டன் முன்வந்துள்ளது. அதன்படி பிரிட்டன் தனது ராணுவ சரக்கு விமானம் உள்பட போர் விமானங்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியானது.

    Advertisement

    இதுபற்றி பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், ''சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காகவும், தற்காப்பு நடவடிக்கைக்காகவும் நாங்கள் உதவி செய்ய உள்ளோம். வான்வழி தாக்குதல்களில் இருந்து சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை பாதுகாக்க ஆர்ஏஎஃப் டைஃபூன் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விமானங்கள் மூலம் தற்காப்பு வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படும்.

    இந்த விமானங்கள் தற்காப்புப் பணியில் மட்டுமே ஈடுபடும். ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படாது. சவுதி அரேபியாவில் பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்களை கொண்டு செல்வதற்கு எங்களின் சரக்கு விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படும். அதேபோல் சவுதி அரேபியாவின் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை பிரிட்டன் ராணுவ ஆலோசகர்கள் வழங்க உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுபற்றி பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறுகையில், ''எங்களின் நட்பு நாடாக சவுதி அரேபியா உள்ளது. சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதல் வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. குறிப்பாக ரியாத்தில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்தததன் மூலம் மத்திய கிழக்கில் நிலைமையை மோசமாக ஹவுதிகள் எந்த அளவுக்கு செல்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இதனை ஹவுதிகள் நிறுத்த வேண்டும்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    English Summary

    The Iran-backed Houthis continue to carry out attacks against Saudi Arabia. In this context, Britain has announced that it will send its combat aircraft to assist Saudi Arabia.