துபாய்: பிளை துபாய் விமானத்தை கடத்தி மோதச் செய்ய நினைத்த துணை விமானியின் செயலை அல்கொய்தா கிளை அமைப்பு பாராட்டியுள்ளது. போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்லாமுக்கு எதிராகப் போரிடும் யூதர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பல்வேறு தரப்பினை சேர்ந்தவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இன்னும் வானில் பறந்து கொண்டிருக்கின்றன என்று அல்கொய்தா கிளை அமைப்பின் ஏமன் கிளையான (AQAP) அமைப்பு தனது வார இதழான அல் பயான் என்பதின் தலையங்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி பிளைதுபாய் விமானம் சென்று கொண்டிருந்தது. 174 பயணிகளுடன் சென்ற இந்த விமானத்தை இந்திய பைலட் ஸ்மித் மச்சார், ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் இயக்கினர்.
விமானம் நடுவானில் பறந்தபோது துனை விமானி ஹமாம் அல் ஹமாமி, பைலட் ஸ்மித் மச்சார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். கோடாரியை கொண்டு தாக்கிவிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டை தனது கைக்குள் எடுத்து அதனை விபத்தில் சிக்க வைப்பதே ஓமன் துணை விமானியின் திட்டமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்திய விமானி ஸ்மித் மச்சார் தீரத்துடன் செயல்பட்டு காக்பிட் அறையை திறந்துவிட்டார். இதனால், விமானத்திற்குள் இருந்த பயணிகள் உள்ளே வந்து ஓமன் விமானியை மடக்கி பிடித்து, விமானத்தை அவசரமாக சவுதி அரேபியாவில் தரையிறக்கினார். ஓமன் துணை விமானி அல் ஹமாமியின் செயல் பயங்கரவாத செயல் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஏமன் கிளையான (AQAP) அமைப்பு தனது வார இதழான அல் பயான் என்பதின் தலையங்கத்தில் இந்த செயலை பாராட்டி பதிவிட்டுள்ளது. செப்டம்பர் 11 க்கும் செப்டம்பர் 30 க்கும் நடுவில் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கட்டுரையில், 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக மைய கட்டிடத்தில் விமானத்தை கொண்டு தாக்கப்பட்டதின் படமும் டெல் அவிவ் சென்று கொண்டிருந்த பிளை துபாய் விமானத்தின் படமும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்லாமுக்கு எதிராகப் போரிடும் யூதர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பல்வேறு தரப்பினை சேர்ந்தவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இன்னும் வானில் பறந்து கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நிரூபித்ததைப் போல, அவை தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகும் அபாயத்தில் உள்ளன. அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் எதிரிகள் கடந்த காலத்தைவிட இன்று அதிகமாக உள்ளனர். கடவுளையோ மறுமையையோ நம்பாத ஒருவர் கூட தாக்குதலை நடத்தக்கூடும். ஆனால், இறுதியில் அவரது நடவடிக்கைகள் இஸ்லாமின் நலன்களுக்கு சாதகமாக அமையக்கூடும்" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.துணை விமானியிடம் தீவிர விசாரணை
அல் கொய்தா அமைப்பு பாராட்டு
போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை