அமெரிக்காவை நம்பி ஏமாந்த சவுதி.. ஹவுதிகளின் ஏவுகணையை தடுக்க முடியாமல் திணறுவது ஏன்? பின்னணி

  • துபாய்: எதிரிகளின் ஏவுகணைகள், ட்ரோன் மற்றும் போர் விமானங்களை வானிலேயே கண்டறிந்து அழிக்கும் அமெரிக்காவின் 'பேட்ரியாட்' மற்றும் 'தாட்' உள்ளிட்ட நவீன வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை சவுதி அரேபியா வைத்துள்ளது. ஆனாலும் கூட ஹவுதிகள் அனுப்பும் ஏவுகணைகள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை தாக்கி வருகிறது. இதில் சவுதி அரேபியா எங்கு திணறுகிறது? அமெரிக்காவின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை ஏமாற்றி ஹவுதிகள் எப்படி தாக்குதல் நடத்துகின்றனர்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    சவுதி அரேபியா - ஏமனின் ஹவுதிகள் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. சவுதி தலைநகர் ரியாத் மற்றும் அபாவில் சர்வதேச விமான நிலையங்களில் ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இதில் 19 பேர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    Advertisement

    நேற்று முன்தினம் இரவில் சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான 'சவுதி அராம்கோ' என்ற கச்சா எண்ணெய் நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து ஹவுதிகள் சவுதி அரேபியாவை குறிவைத்து அடித்து வருகிறது.

    தற்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. சவுதி அரேபியா, அமெரிக்காவின் நட்பு நாடு. அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கி குவித்துள்ளது. இதுதவிர அமெரிக்காவின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களான 'பேட்ரியாட்' மற்றும் 'தாட்' உள்ளிட்டவற்றை சவுதி அரேபியா பயன்படுத்தி வருகிறது. இந்த 'பேட்ரியாட்' மற்றும் 'தாட்' உள்ளிட்டவை வானில் பறந்து வரும் எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை கண்டறிந்து அழிக்கும் வல்லமை கொண்டது.

    Advertisement

    இதில் 'தாட்' என்பது வானில் 40 முதல் 150 கிலோமீட்டர் உயரத்தில் பறககும் எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும். குறைந்த, நடுத்தர மற்றும் இடைப்பட்ட தூரம் வரை பாயும் பாலிஸ்ட்டிக் ஏவுகணை மட்டுமே கண்டுபிடித்து தாக்கி அழிக்கும். போர் விமானங்கள் மற்றும் குரூஸ் வரை ஏவுகணைகளை இது அழிக்காது.

    அதேவேளையில் 'பேட்ரியாட்' வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் வானில் 20 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் என்பது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிகம் மாக் 5 என்ற வேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும்.

    Advertisement

    இருப்பினும் கூட தற்போது ஹவுதிகள் ட்ரோன், பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி சவுதி அரேபியாவை தாக்கி வருகின்றனர். அமெரிக்காவின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களான 'பேட்ரியாட்' மற்றும் 'தாட்' உள்ளிட்டவை இருந்தாலும் கூட சவுதி அரேபியா ஹவுதிகளின் ஏவுகணைகளை தடுக்க முடியாமல் திணறுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் டெக்னிக் தான்.

    ஹவுதிகள் தற்போது பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிக வானில் அதிக உயரத்தில் ஏவி வேகமாக இலக்குகளை நோக்கி இறங்கும்படி ஏவி வருகின்றன. அதேபோல் குரூஸ் வகை ஏவுகணைகள், ட்ரோன்களை சவுதி அரேபியாவின் ரேடாரில் சிக்காத வகையில் தாழ்வாக பறக்க செய்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி ட்ரோன்களை அளவில் சிறியதாகவும், மெதுவாகவும் ஏவி தாக்குதல் நடத்துகின்றன.

    Advertisement

    இந்த 3 டெக்னிக்கால் சவுதி அரேபியா பயன்படுத்தும் 'பேட்ரியாட்', 'தாட்' உள்ளிட்ட வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. அதுமட்டுமின்றி முதலில் ட்ரோன் அதன்பிறகு ஏவுகணைகளை உடனடியாக ஹவுதிகள் ஏவுகின்றன. இதில் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்கள் ஏதேனும் ஒரு இடத்தில் சொதப்பும்பட்சத்தில் அங்கு தாக்குதல் நடந்து விடுகிறது.

    அதேபோல் சவுதி அரேபியாவின் நிலப்பரப்பு மிக பெரியது. சவுதி அரேபியாவின் மொத்த நிலப்பரப்பு 2.2 மில்லியன் சதுர கிலோமீட்டராக உள்ளது. விமான நிலையம், புனித தலங்கள், துறைமுகம், எண்ணெய் நிறுவனங்கள் என்று தனித்தனி இடங்களில் உள்ளன. இதனால் அனைத்து இடங்களிலும் வான்வெளி பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடியாத சூழல் உள்ளது. இந்த ஓட்டையை பயன்படுத்தியும் ஹவுதிகள் தாக்குதல் நடத்துவதால் சவுதி அரேபியா பாதிக்கப்படுகிறது.

    Advertisement

    இருப்பினும் பல இடங்களில் இந்த சிஸ்டம்கள் சிறப்பாக செயல்பட்டு ஹவுதிகளின் ஏவுகணைகள், ட்ரோன்களை அழித்து இருந்தாலும் சில இடங்களில் ஹவுதிகளின் டெக்னிக் சவுதி அரேபியாவிற்கு அழிவை ஏற்படுத்தி வருவதாக 'டிபென்ஸ்' வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Saudi Arabia possesses advanced air defense systems—including the US-made ‘Patriot’ and ‘THAAD’—designed to detect and destroy enemy missiles, drones, and fighter jets in mid-air. Despite this, missiles launched by the Houthis continue to strike Saudi airports and oil facilities. Information has now emerged regarding where Saudi Arabia is struggling and how the Houthis manage to bypass these US air defense systems to carry out their attacks.