அதெப்படி துபாய் - இஸ்ரேல் விமானத்தில் கூடுதலாக 2 பைலட் பயணித்தது ஏன்? Deadheading தெரியுமா? பின்னணி

  • துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் இந்திய பைலட்டை கத்தி மற்றும் கோடரியால் தாக்கியதால் ஓமன் துணை விமானியை பயணிகள் சிறை பிடித்தனர். இதையடுத்து விமானத்தில் பயணித்த 2 பைலட்டுகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவில் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் தான் எப்படி கூடுதலாக 2 விமானிகள் விமானத்தில் பயணித்தனர்? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வரும் நிலையில் அதன் பின்னணியில் deadheading என்பது தான் காரணம் என தெரியவந்துள்ளது.

    Advertisement

    துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு செப்டம்பர் 30ம் தேதி 'ஃப்ளைதுபாய்' விமானம் பயணித்தது. விமானத்தை இந்திய பைலட் ஸ்மித் மச்சார், ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் இயக்கினர். விமானம் வானில் பறந்தபோது துனை விமானி ஹமாம் அல் ஹமாமி, பைலட் ஸ்மித் மச்சார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.

    Advertisement

    கத்தி மற்றும் காக்பிட் கோடரியால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் ஸ்மித் மச்சார். நீண்டநேரம் போராடி அவர் காக்பிட் அறை கதவை திறந்தார். இதையடுத்து பயணிகள் துனை விமானி ஹமாம் அல் ஹமாமியை சிறை பிடித்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் ஹமாம் அல் ஹமாமி, இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கொன்றுவிட்டு விமானத்தை கடத்தி இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டடத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி பயணிகள் மற்றும் டெல்அவிவ் பொதுமக்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த வேறு 2 பைலட்டுகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கினர். தற்போது ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    Advertisement

    இதற்கிடையே தான் பொதுவாக விமானத்தில் 2 விமானிகள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் இந்த சம்பவம் நடந்த விமானத்தில் மட்டுமே எப்படி 4 விமானிகள் பயணித்தனர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் பின்னணியில் விமான துறையில் பின்பற்றப்பட்டு வரும் Deadheading முறை தான் உள்ளது.

    Deadheading என்பது விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் சாதாரண பயணிகள் போல் பயணிக்கும் முறையாகும். விமான நிறுவனத்தில் பணியாற்றும் பைலட்டுகள், விமான பணியாளர்கள் அடுத்த பணிக்காக தாங்கள் பணிபுரியும் விமானத்திலேயே செல்வதாகும். அப்படித்தான் இரண்டு பைலட்டுகள் இந்த விமானத்திலும் சென்றனர். ஸ்மித் மச்சார் - ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் ஓட்டும் விமானத்தை டெல்அவிவ்வில் இருந்து துபாய் ஓட்டி வரும் பணிக்காக அவர்கள் அந்த விமானத்தில் பயணித்தனர்.

    Advertisement

    ஆனால் செல்லும் வழியிலேயே ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, இந்திய பைலட்டை தாக்கியதால் மீதமுள்ள 2 விமானிகளும் விமானத்தை இயக்க வேண்டிய சூழல் வந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் இருந்ததால் தான் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இல்லாவிட்டால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு பெரும் அசம்பாவிதம் கூட ஏற்பட்டு இருக்கலாம்.

    மேலும் இந்த deadheading முறையில் கூடுதல் பைலட்டுகள் பெரும்பாலான விமானங்களில் பயணிப்பது இல்லை. அதேவேளையில் நீண்ட தூரம் பயணிக்கும் விமானம், போர் பதற்றம் நிலவும் வான்வெளி பரப்புகளை கடக்கும் விமானங்கள் உள்ளிட்ட இடங்களில் பறக்கும் விமானங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி பயணிக்கும் விமானிகளுக்கு படித்தொகை வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

    English Summary

    What is Deadheading: Passengers on a Dubai-Tel Aviv flight subdued an Omani co-pilot after he attacked the Indian pilot with a knife and an axe. A major disaster was averted when 'deadheading' two other pilots both on board took control of the aircraft and landed it in Saudi Arabia.