திணறும் சவுதி அரேபியா! பாகிஸ்தான் – துருக்கி உதவினாலும் ஹவுதிகளிடம் அடிவாங்குவது ஏன்? பின்னணி

  • துபாய்: உலகில் ராணுவ பலத்தில் சிறந்த நாடாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. நவீன ஆயுத வசதிகளை வைத்துள்ளது. ஆனாலும் கூட ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளிடம், சவுதி அரேபியா அடிவாங்கி வருகிறது. இது ஏன்?, பலம் வாய்ந்த சவுதி அரேபியாவின் ராணுவத்தால் ஹவுதிகளை அடக்க முடியாமல் அடிவாங்குவது ஏன்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    சவுதி அரேபியா - ஏமனின் ஹவுதிகள் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மோதல் தற்போது தீவிரமாகி வருகிறது. இருதரப்பும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி வருகின்றன. இதில் சவுதி அரேபியாவிற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட தொடங்கி உள்ளது.

    Advertisement

    சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் உள்பட பிற இடங்களில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இந்தியர் உள்பட இதுவரை மொத்தம் 18 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். மேலும் 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

    இப்போது தான் பலருக்கும் ஒரு கேள்வி கேள்விகள் சவுதி அரேபியா என்பது பணப்பலத்தில் சிறந்து உள்ளது. ஆனால் ஏமன் நாட்டை எடுத்து கொண்டால் அங்கு பணபலம் கிடையாது. ஏமன் அரசு, கிளர்ச்சியார்கள் நிர்வாகம் என்று அந்த நாடு துண்டுதுண்டாகி உள்ளது. ஆனாலும் சவுதி அரேபியா, ஹவுதிகளிடம் அடிவாங்குவது ஏன்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    சவுதி அரேபியாவை ஒப்பிடும்போது ஹவுதிகளின் ராணுவ பலம் மிகவும் சிறியது. ஏனென்றால் சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் மிகச்சிறந்த ஆயுத வசதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனது ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியை அதிகரித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில், தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 6.5 சதவீதத்தை, சுமார் 83 பில்லியன் டாலரை பாதுகாப்புத் துறைக்காக சவுதி அரேபியா செலவிட்டது. இதன்மூலம் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை செலவிட்ட நாடுகளின் பட்டியலில் உலகளவில் 8 இடத்தை எட்டிப்பிடித்தது சவுதி அரேபியா.

    மேலும் நவீன ஆயுதங்களை வைத்துள்ளன. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஏராளமாக ராணுவ தளவாடங்களை வாங்கி குதிவை்து வைத்துள்ளன. அதன்படி எஃப் - 15 ரக போர் விமானங்கள், யூரோஃபைட்டர் டைஃபூன்ஸ் (Eurofighter Typhoons), பேட்ரியாட் மற்றும் 'தாட்' ஏவுகணை தடுப்பு அமைப்புகள் உள்ளன. இது போதாது என்று சமீபத்தில் பாகிஸ்தான் - துருக்கி நாட்டுடன் 'மெக்கா' ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தப்படி இருநாடுகளும் தற்போது சவுதி அரேபியாவிற்கு உதவி வருகின்றன. ஆனாலும் சவுதி அரேபியா அடிவாங்குவதற்கு முக்கிய காரணம் உள்ளது.

    Advertisement

    அதாவது சவுதி அரேபியாவின் நிலப்பரப்பு மிகவும் பெரியது. சவுதி அரேபியாவின் மொத்த நிலப்பரப்பு 2.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும். குறிப்பாக சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இது 225 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது.

    இப்படியான ஒரு நாட்டில் பேட்ரியாட் , தாட் உள்ளிட்ட வான்வெளி பாதுகாப்பு சாதனங்கள், போர் விமானங்கள் மற்றும் பிற சென்சார்கள் அடங்கிய பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்தி இருந்தாலும் கூட எதிரிகளால் எளிதில் ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும் என்று லண்டனைச் சேர்ந்த 'MENA Analytica' என்ற நிறுவனத்தின் ஆய்வாளர்ஆண்ட்ரியாஸ் கிரீக் கூறினார்.

    Advertisement

    பெரிய நாடு என்பதால் சவுதி அரேபியாவால் அனைத்து இடங்களிலும் ஏவுகணை, ட்ரோன்களை கண்டறியும் வான்வெளி பாதுகாப்பு சாதனங்களை நிலைநிறுத்த முடியாது. இதனை பயன்படுத்தி தான் ஹவுதிகள், சவுதி அரேபியாவை குறிவைத்து தாக்கி வருகின்றன.

    மறுபுறம் ஏமனின் ஹவுதிகளுக்கும் ஒரு பிளஸ் பாயிண்ட் உள்ளது. ஹவுதிகள் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர். ஈரானின் ஆதரவில் தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் ஹவுதிகள் தங்களின் ஆயுத வலிமையை கணிசமாக மேம்படுத்தி உள்ளது. ஏமனில் இருந்துசுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேல் வரை தங்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி துல்லியமாக அட்டாக் செய்யும் வகையில் தனது பலத்தை அதிகரித்துள்ளது. அதேபோல் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் கிடங்குகளையும் குறிவைத்து தாக்கும் வசதியை வைத்துள்ளது.

    Advertisement

    இவை எல்லாவற்றுக்கும் மோலாக சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை குழப்பும் வகையில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஒருங்கிணைத்து அனுப்பும் தொழில்நுட்பத்தை ஹவுதிகள் கையில் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி பாலஸ்தீன்-2 மற்றும் ஈரானிய கத்ர் ஏவுகணை மாற்று பெயர் கொண்ட ஏவுகணை என அறியப்படும் தூஃபான் நடுத்தர தூரத்துக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஹவுதிகள் வைத்துள்ளன. புர்கான் மற்றும் பத்ர் போன்ற குறுகிய தூர ஏவுகணைகளையும் வைத்துள்ளன. இந்த ஏவுகணைகளை வைத்து ஹவுதிகளால் எளிதில் சவுதி அரேபியாவை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Saudi Arabia is recognized as a nation with formidable military strength and possesses modern weaponry. Yet, it is suffering setbacks at the hands of the Iran-backed Houthis operating in Yemen. Here, we examine in detail why this is happening—why the powerful Saudi military is unable to subdue the Houthis and continues to face reverses.