ஈரோடு: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. பாஜகவை கொள்கை எதிரி என அறிவித்த தவெக, மத்திய அரசை எதிர்ப்பதில்லை என திமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் தவெக வர தயாராகவுள்ளதாகவும், அமித்ஷாவே முதலமைச்சரின் தோளை தட்டி பாராட்டியுள்ளார் என்றும் செங்கோட்டையன் பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " சட்டமன்றத்தில் நல்ல கருத்துகளை சொல்லுங்கள் ஏற்கிறோம் என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் கருத்தை சொல்ல மாட்டேன். ஆட்சியை கவிழ்ப்பேன் என்கிறார்கள். தளபதியை தவிர வேறு யாராலும் வெல்ல முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். எங்கள் மீது ஏதாவது கை வைத்தால் அவ்வளவு தான். 234 தொகுதியும் நாங்கள் தான். ஒருத்தரும் கிழிக்க முடியாது.
கொஞ்சம் டச் செய்தாலும் நாங்கள் மட்டும் தான் இருப்போம். சட்டமன்றத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள். தேர்தல் களத்தில் நிற்கிறோம். மறுபடியும் உங்களை ஆட்டம் காண பலர் வருகிறார்கள். யாரும் செய்ய முடியாத சாதனையை முதலமைச்சர் செய்துள்ளார். எல்லாவற்றையும் பார்த்து சொல்கிறார்கள். அதிமுகவில் உங்கள் நிலையை பார்த்து 6 பேர் ராஜினாமா செய்து வந்துவிட்டனர். 47இல் 6 குறைந்துவிட்டது. இன்னும் 10 பேர் வர தயாராகவுள்ளனர். மொத்தமாக 25 பேர் வரவும் தயாராகவுள்ளனர். இது எல்லாம் நடக்கும். அப்போது தெரியும். எல்லாரும் கூட்டு சதி செய்கிறார்கள். நம் தலைவர் மத்திய உள்துறை அமைச்சரை பார்த்தார். முதலமைச்சர் கோட் சூட்டுடன் நிற்பதை பார்த்து அவரின் தோள்பட்டையை தட்டி, பெஸ்ட் கவர்ன்மென்ட் நடத்தறீங்க என்று சொல்லிவிட்டார். அப்பறம் இவங்களுக்கு எல்லாம் என்னப்பா வேலை இங்க. என்ன நான் சட்டமன்றத்திற்கு வந்தால் சிங்கர் எல்லாம் பாடுவது போல தெரிகிறது என்கிறான். சிங்கர் பாட மாட்டார்கள். அந்த பாடல்களை வீட்டில் எத்தனை பேர் ரசித்து பார்க்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். அது உங்களுக்கு தெரியாது. அவருக்கு பாடினால் பிடிக்காது. உங்களை பற்றி எப்படிப்பா பாட முடியும். உங்களை பற்றி பாடினால் போய்வா மகனே போய்வா என்று தான் சொல்ல முடியும். வேற என்ன சொல்ல முடியும். எங்களால் சொல்ல முடியாது சொன்னால் வருத்தப்படுவீர்கள். இருவர் தப்பித்து சட்டமன்றத்திற்குள் வந்துள்ளனர். நம்மாளை விலைக்கு வாங்கி எடப்பாடி பழனிசாமி தப்பித்தார். சேப்பாக்கத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் மனது மாறிவிட்டனர். இல்லையென்றால் இங்கேயும் கதை முடிந்திருக்கும். எதிர்க்கட்சி வரிசையிலேயே எதிர்க்கட்சியை சார்ந்த தலைவர், முதலமைசர் துணை முதலமைச்சர் யாரையும் காணவில் லை என்று தேடும் நிலை வந்திருக்கும். மக்கள் பணியில் தெளிவாக இருங்க" என்றார்.25 அதிமுக எம்எல்ஏக்கள் வரத்தயார்
யாரும் இல்லாத நிலை