திடீர் சேஞ்ச்.. நாளை பெருந்துறையில் நடைபெறவிருந்த முதல்வர் விஜய் நிகழ்ச்சி வேறொரு இடத்துக்கு மாற்றம்

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நாளை (நவம்பர் 3) நடைபெறவிருந்த முதல்வர் விஜய் நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பில் நாளை (நவம்பர் 3) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    இந்த விழாவில் ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 4,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொங்கு பொறியியல் கல்லூரியில் ஹெலிபேடு அமைக்கும் பணிகள், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை அன்றாடம் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், திடீரென நிகழ்ச்சி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி இடத்துக்கு பதிலாக திருமண மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

    Advertisement

    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த முதல்வரின் நிகழ்ச்சி, காஞ்சிக்கோவில் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதேசமயம், ரோடு ஷோவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டையில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி முன்பு வேறொரு இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், திடீரென மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல, நாளை பெருந்துறையில் நடைபெறும் நிகழ்ச்சியும் இடம் மாற்றம் செய்யப்பட்டதால், அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

    Advertisement

    தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை , பெருந்துறை , அம்பாசமுத்திரம், கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தல் நடக்கும் இடங்களாகப் பார்த்து, அங்கே அரசு விழா என ஒரு விழா நடத்தி, அதை காரணம் காட்டி ரோடு ஷோ மூலம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு பணத்தை பயன்படுத்துவதாக அரசு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Reports indicate that the event featuring Chief Minister Vijay, which was scheduled to take place tomorrow at Engineering College near Perundurai in Erode district, has been relocated.