ஈரோடுக்கு நவ.3-ல் வரும் விஜய்.. 13 மாவட்ட மகளிருக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்

  • ஈரோடு: தமிழகத்திலேயே முதல் முறையாக, ஈரோட்டில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு 1,110 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் வழங்கவிருக்கிறார் என்று வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு வருகை தர உள்ளார். பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    இந்த ஏற்பாடுகளை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், வருவாய் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் மோகன், சண்முகன், சத்தியபாமா உள்ளிட்டோருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், மகளிருக்கான குடிநீர் உள்ளிட்ட சுகாதார வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினர்.

    வரலாறு படைக்கும் நிகழ்ச்சி

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிம் கூறுகையில், தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 1110 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி வரலாறு படைக்கின்ற நிகழ்ச்சியாக நடைபெற இருப்பதாகவும், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான ஆனந்த் தலைமையில் இந்த விழா நடைபெறவுள்ளது.

    Advertisement

    இதில் தானும், கைத்தறித் துறை அமைச்சர் விஜய பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளோம். 13 மாவட்டங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரலாறு படைக்கின்ற நிகழ்ச்சியாக அமையப் போகிறது என்றார்.

    English Summary

    Chief Minister Vijay is set to distribute welfare schemes worth Rs 1,110 crore to women self-help groups from 13 districts at an event in Perundurai, Erode, on November 3.