ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு கல்லூரியில் நாளை நடைபெற இருந்த தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது, முதல்வர் விஜய் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகிறார்.
மகளிர் சுய உதவி குழுவின் மூலமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற இருக்கிறது. அதற்காகத்தான் 1100 கோடி ரூபாய் நிதிகள் வழங்கி ஒரு வரலாறு படைக்கிற நிகழ்வாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது. முதல்வர் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அங்கிருந்தே மக்களும் அலைகடலென வருவார்கள். என்றைக்குமே அவர் வருகிற இடம் முழுவதுமே ரோட் ஷோ தான். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை கலெக்டர், காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவுகளை மேற்கொண்டு தலைமைக்கு குறிப்பிட்டிருக்கிறார்கள். நாங்களும் அதை பார்வையிட்டு நிறைவாக இருக்கிறது என்பதை தலைமைக்கு சொல்லியிருக்கிறோம் என்று கூறினார். பெருந்துறை கொங்கு கல்லூரியில் நாளை நடைபெற இருந்த தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் விஜய் வருகைக்காக மேடை உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந் நிலையில் விழா நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றச் சொல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு விழா மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.120 கேள்விகள் ரெடி.. அன்பில் மகேஸுக்கு எதிராக.. விஜய் போட்ட 'சக்ரவியூகம்'? அறிவாலயம் பகீர்!