அப்பா.. கூடைப்பந்து கோச்சிங் சென்டரில் அம்மா செய்த காரியம்.. சிறுவன் சொன்ன ஒற்றை சொல்! பதறிய ஈரோடு

  • ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், பெற்றோர்களையே நிலைகுலைய வைத்து வருகிறது.. தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக செய்த ஒரு செயல், அந்த குடும்பத்தையே சிதைத்துவிடும் என்று பெற்ற தந்தை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கெண்டு வந்தாலும், சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஈரோட்டில் அடங்கவில்லை.

    Advertisement

    ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி கங்கா கார்டன் பகுதியை சேர்ந்தவர் தனியார் கார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.. இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    Advertisement

    கூடைப்பந்து கோச்சிங்

    இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். அந்த சிறுவன் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். மகனுக்கு கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், அவனை பயிற்சிக்கு சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர்.

    அதன்படி, ஈரோடு மோளகவுண்டன்பாளையத்தை சேர்ந்த முத்துராஜா (30) என்பவரிடம் கோச்சிங்குக்காக சேர்த்தனர். முத்துராஜா அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார்.. அதேசமயம் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

    தினந்தோறும் டிரெயினுங்குக்காக மகனை அழைத்து சென்றுள்ளார் டீச்சர்.. அப்போது டீச்சருக்கும் முத்துராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.. இருவரும் தனிமையில் நெருங்கி பழகும் அளவுக்கும் சென்றார்கள்..

    Advertisement

    கோச்சிங் சென்டரில் நடந்த அசிங்கம்

    ஒருகட்டத்தில், தனது மனைவியின் நடத்தையில் கார் நிறுவன விற்பனை பிரதிநிதிக்கு சந்தேகம் வந்தது.. அதனால் மனைவியின் நடவடிக்கையை கண்காணிக்க துவங்கினார்.

    இதனிடையே கோச்சிங் சென்டரில் 11 வயது சிறுவனை பாலியல் ரீதியான எண்ணத்துடன் முத்துராஜா தவறான முறையில் தொட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவன் தன்னுடைய அப்பாவிடம் தெரிவித்திருக்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    பெற்ற தாயே உடந்தையா

    அந்த புகாரில் முத்துராஜாவின் இந்த கேவலமான செயலுக்கு, தன்னுடைய மனைவியும், முத்துராஜாவின் நண்பரான வினோத் (29) என்பவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வினோத் என்பவர் முத்துராஜா பணியாற்றும் அதே மருத்துவமனையில் மனித வள பிரிவில் பணிபுரிந்து வருகிறாராம்.

    Advertisement

    இந்த புகார் குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, பயிற்சியாளர் முத்துராஜா, அவருக்கு உடந்தையாக இருந்த வினோத் மற்றும் சிறுவனின் அம்மா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில், சிறுவனின் அம்மா, அதுவும் ஒரு டீச்சர் மீதே புகார் எழுந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போக்சோ சட்டங்கள் இருந்துமா?

    தற்போதைய சூழலில், போக்சோ சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிறைய கவலையை ஏற்படுத்தி வருகிறது.. பெண் குழந்தைகளை மட்டும் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருந்த சமூகம், இப்போது ஆண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை யாருடைய கண்காணிப்பில் விடுகிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய கொடுமையான குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவும் போக்சோ சட்டங்கள் மிகத் துல்லியமாகவும், வேகமாகவும் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    English Summary

    Erode Basketball Coaching Centre! "Dad, What Mom Did" Boy's Words Shock Everyone