வாட்ச்மேனையும் விட்டு வைக்காத ஈரோடு லதா.. ரூ.762 சம்பளத்திலும் ஷேர்? தாலுகா ஆபீஸை தெறிக்கவிட்ட பிடிஓ

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில், ஒரே மாதத்தில் 24 அரசு ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு பெண் அதிகாரி சிக்கி உள்ளார்.. கான்ட்டிராக்ட் அடிப்படையில் வேலை பார்ப்பவர்களையும் விட்டுவைக்காமல் பணத்தை பிடுங்கிய அந்த பெண் யார்?

    Advertisement

    லஞ்சத்துக்கு எதிரான முழக்கத்துடன் தவெக அரசு ஆட்சி அமைத்துள்ளது.. தமிழக அரசு துறைகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் லஞ்ச வேட்டையைக் கட்டுப்படுத்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்...

    Advertisement

    அரசு அதிகாரிகள் கையூட்டு

    அந்தவகையில் கடந்த மாதம் மட்டுமே, ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டுப் பெற்ற 24 அரசு ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பொறிவைத்துப் பிடிக்கும் சோதனைகள் மட்டுமன்றி, சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டு வந்த பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரகசிய சோதனைகளை மேற்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, சென்னை மற்றும் கரூர் ஆகிய முக்கிய மாவட்டங்களில் இயங்கி வரும் 13 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் படையினர் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, உரிய கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Advertisement

    ஜிபே மூலம் லஞ்சப்பணம்

    இந்தச் சோதனைகளின்போது அதிகாரிகளுக்கு காத்திருந்த பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், ரொக்கப் பணமாக லஞ்சம் வாங்குவதை தாண்டி, ஜி-பே மூலம் லஞ்சப் பணத்தை இந்த அதிகாரிகள் வாங்கியிருக்கிறார்களாம்.. ஜி-பே பரிவர்த்தனைகள் மட்டுமே ரூ.94 லட்சத்து 69 ஆயிரத்து 887 அளவுக்கு இருந்துள்ளது லஞச ஒழிப்புத்துறையினரை அதிர வைத்தது..

    ரொக்கம் மற்றும் ஜி-பே பரிவர்த்தனைகள் அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 607 பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைதான நபர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    ஈரோடு பெண் அதிகாரி

    இந்த நேரத்தில் இன்னொரு அரசு பெண் அதிகாரி லஞ்சம் வாங்கி சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.. ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ-வாக பணியாற்றி வருபவர் பவானி மைலம்பாடியை சேர்ந்த லதா (55). இதே அலுவலகத்தில், ஈரோடு கனிராவுத்தர்குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (55) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நைட் டியூட்டி செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ரூ.762 என்ற குறைந்தபட்ச நிபந்தனை ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், பிடிஓ லதா தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    ஒப்பந்த தொழிலாளர் 762 ரூபாய் சம்பளம்

    அதாவது அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் தற்காலிக ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையைத் தனக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி வந்தாராம்.. ஒருவேளை அப்படி லஞசம் தராதவர்களின் வேலையை பறித்துவிடுவேன் என்றும் லதா மிரட்டி வந்ததாக தெரிகிறது.. இதனால் நாளுக்கு நாள் லதா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அப்படித்தான் நைட் டியூட்டி சண்முகசுந்தரத்திடமும், அவரது குறைந்தபட்ச மாத சம்பளத்தில் இருந்து ஒரு பங்காக ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டு பிடிஓ லதா வற்புறுத்தியுள்ளார்.

    Advertisement

    தினமும் வாங்கும் 762 ரூபாயில் குடும்பத்தை நடத்தி வரும் தன்னால் எப்படி 10 ஆயிரம் தர முடியும் எனுறு சண்முகசுந்தரம் கேட்டுள்ளார்.. அத்துடன் தன்னால லஞ்சம் தர முடியாது என்றும் கறாராக கூறி, பிடிஓவின் அத்துமீறல் குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசிலும் புகார் தந்துவிட்டார்.

    பிடிஓ லதா கைது

    இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், பிடிஓ லதாவை கையும் களவுமாக பிடிக்கத் திட்டமிட்டனர். அதன்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சண்முகசுந்தரத்திடம் கொடுத்து, அதை பிடிஓவிடம் வழங்குமாறு அறிவுறுத்தினார்கள்.. .

    திட்டமிட்டபடி, சண்முகசுந்தரம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை பிடிஓ லதாவிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், லதாவை உடனடி விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர்.

    ஒப்பந்த ஊழியரையும் மிரட்டி லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பெண் உயர் அதிகாரி கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவம், ஈரோடு அரசு வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!

    English Summary

    Erode BDO Latha Caught Demanding Share From Rs 762 Watchman's Daily Wage at Taluk Office