பித்தளை பாத்திரம் திருட போய் எக்குத்தப்பு காரியத்தை செய்த காமுகர்கள்.. ஈரோடு கலெக்டர் அதிரடி உத்தரவு

  • ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பித்தளை பாத்திரங்களை திருட போயிருக்கிறார்கள் 2 பேர்.. அங்கு எதிர்பாராத விதமாக செய்த அந்த எக்குத்தப்பு காரியம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. குடிபோதையில் அரங்கேறிய இந்த விபரீத செயலை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்த வழக்கில் அதிரடியான ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடுமையான அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். அதை பற்றி பார்ப்போம்..!!

    Advertisement

    தமிழகத்தில் சமீப காலமாகவே மூதாட்டிகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.. சென்னை புளியந்தோப்பு, வேளச்சேரி, திருப்பூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஒரே மாதத்தில் பாதுகாப்பற்ற நிலையில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்டுள்ளன.

    Advertisement

    "சிங்கப்பெண் படைத் திட்டம்",

    இந்த கொடுஞ்செயல், வயது முதிர்ந்த தாய்மார்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது... இத்தகைய வக்கிர புத்தி கொண்ட குற்றவாளிகளின் பலவீனமான இலக்காக மாறும் மூதாட்டிகளைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ள நிலையில், அவர்கள் மீதான கடுமையான சட்ட நடவடிக்கைகளும், கூடுதல் பாதுகாப்பு வளையத்திற்கான கோரிக்கைகளும் அதிகமாகவே எழுந்து வருகின்றன. .

    அரசு கொண்டு வந்துள்ள "சிங்கப்பெண் படைத் திட்டம்", இளம்பெண்கள் மட்டுமின்றி, தனியாக வாழும் மூதாட்டிகளின் பாதுகாப்பிற்கும் ஒரு பலத்த அரணாக விளங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

    Advertisement

    ஈரோட்டில் பாட்டி பலாத்காரம்

    இதோ ஈரோட்டில் நடந்துள்ள இந்த கொடுமையை பாருங்கள்.. பவானியை சேர்ந்தவர் அந்த 74 வயது மூதாட்டி.. இவர் கடந்த மாதம் 20ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வீட்டிலுள்ள பொருட்களை திருடுவதற்காக, மண் தொழிலாளர் 2வது வீதியை சேர்ந்த ஹரிக்குமார் (22), கிரி (23) ஆகியோர் முயன்றனர்.

    பாட்டியின் வீட்டுக்குள் புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடியிருக்கிறார்கள்.. அப்போது, இதனை பார்த்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார்.. குடிபோதையில் இருந்த 2 இளைஞர்களும் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதோடு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.. இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி, பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    Advertisement

    பாட்டி இறந்துவிட்டார்

    இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. மேலும் சிசிடிவி கேமரா உதவியுடன் ஹரிக்குமார், கிரி ஆகியோரையும் கைது செய்தனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாட்டி நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.. ஈரோடு அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் முடிந்ததுமே, அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜெயிலிலிருந்த ஹரிக்குமார், கிரி ஆகியோர் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம் 1982 கீழ் பாலியல் குற்றவாளிகள் எனக் கருதி தடுப்பு காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் தொடர்ந்து பொது ஒழுங்கு மற்றும் அமைதிக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டாசில் கைது செய்யுமாறு எஸ்பி பரிந்துரை செய்தார்.

    Advertisement

    எஸ்பி போட்ட உத்தரவு

    அதன்பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிடவும், கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பேரையும் பவானி இன்ஸ்பெக்டர் சரவணன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளார்.

    இன்றைய காலகட்டத்தில் வயது முதிர்ந்த பாட்டிகளும் கூட கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் அவல நிலை தொடர்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது வெறும் இளம் வயதினரோடு நின்றுவிடாமல், வாழ்வின் கடைசி பகுதியிலுள்ள முதியோர்களுக்கும் அவசரமாக உறுதி செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்....!!!

    English Summary

    Erode Brass Utensil Theft.. Shocking Misconduct During Robbery Attempt, Collector Issues Strict Order