ஈரோடு: ஈரோட்டில் நடந்த கொடுமையை பாருங்கள்.. சந்தேகப் பேய் ஒரு மனிதனின் மனதை ஆக்கிரமித்துவிட்டால், அங்கு அன்பும் நம்பிக்கையும் அடியோடு அழிந்துபோய்விடும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. ஒரு நொடி கோபத்தால் எடுத்த முடிவு, ஒரே நாளில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே மொத்தமாக சீரழித்துவிட்டது.. அந்த 3 பெண் குழந்தைகளும் கதறி அழுது கொண்டிருக்கின்றன..!!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் லூர்து குமார். இவரது மகள் ரெபேக்கா.. 24 வயதாகிறது.. இவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
ஈரோடு தம்பதி பழக்கடை நடத்தி வந்த பாகப்பிரகாஷ், மதுபான பார் ஒன்றிலும் வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரெபேக்கா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பவானிசாகரில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். பிறகு அங்கிருந்து அருகே உள்ள நால்ரோடு பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சமாதானம் ஆகாத மனைவி இதனால், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்த பாகப்பிரகாஷ், சில தினங்களுக்கு முன்பு வந்து சமாதானம் பேச முயன்றார். ஆனால், ரெபேக்கா அவருடன் மீண்டும் சென்று வாழ பிடிக்கவில்லை.. அதனால் குடும்பம் நடத்த வரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ரெபேக்கா யாருடனோ செல்போனில் நீண்ட நேரம் பேசுவதாக , பாகப்பிரகாஷ் சந்தேகப்பட்டார்.. எப்போது மனைவிக்கு போன் செய்தாலும், பிஸி பிஸி என்றே வந்ததாம்.. இது பாகப்பிரிகாஷூக்கு சந்தேக புயலை கிளப்பி விட்டுள்ளது. போனில் யார் தன்னிடம் வாழவும் வராமல், செல்போனும் பிஸியாகவே இருப்பதால், ஆத்திரமடைந்த பாகப்பிரகாஷ், மனைவியை கொல்ல முடிவு செய்தார்.. இதற்காக ராமேஸ்வரத்தில் கத்தியை வாங்கி, அதை மறைத்து எடுத்துக்கொண்டு பவானிசாகர் கிளம்பினார். நால்ரோட்டிலுள்ள மனைவியின் வீட்டிற்கும் சென்றார்.. அங்கே வீட்டில், ரெபேக்காவின் பெற்றோர் மற்றும் தங்கை இருந்துள்ளனர்.. அவர்களிடமும் குழந்தைகளிடம் அன்பாகப் பேசியுள்ளார். பிறகு, அறைக்குள் உட்கார்ந்திருந்த மனைவியிடம் சென்று, "தயவுசெய்து மீண்டும் குடும்பம் நடத்த வா" என கெஞ்சியுள்ளார். ஆனால் ரெபேக்கா அதை கேட்க மறுத்து மீண்டும் உறுதியாகப் பேசியதால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பாகப்பிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரெபேக்காவை சரமாரியாகக் குத்தியுள்ளார். 3 பிஞ்சு குழந்தைகள் ரெபேக்காவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைக் கண்டு உறைந்துபோயினர். தப்பியோட முயன்ற பாகப்பிரகாஷை மடக்கிப் பிடித்து பவானிசாகர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரெபேக்காவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் பாகப்பிரகாஷ் மீது BNS 103 (கொலை வழக்கு) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். 3 பிஞ்சு பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு, சந்தேக பேயால் மனைவியின் உயிரைப் பறித்த இந்த கொடூரச் சம்பவம் பவானிசாகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது...!!