ஈரோடு டூ கள்ளக்குறிச்சி.. புருஷனோட போறேன், வழிய விடு! கவிதா சொன்னதுமே கள்ளக்காதலன் செய்த காரியம்

  • ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், குடும்பம், குழந்தைகள் என அமைதியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திடீரென நுழைந்துவிட்டது கள்ளக்குறிச்சி கள்ளக்காதலனின் கூடாநட்பு.. இது கடைசியில் பிளேடு வெட்டிலும் ரத்த வெள்ளத்திலும் கொண்டுபோய் முடிந்துள்ளது.. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஈரோடு மாவட்டம் புத்தூர்புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.. 42 வயதாகிறது.. இவருக்கும் கவிதா (38) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் ஜெகஜோதியாக திருமணம் நடைபெற்றது.

    Advertisement

    இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், நாளடைவில் புயல் வீசத் தொடங்கியது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    ஈரோடு கள்ளக்காதல்

    அப்போதுதான் அந்த ஊரை சேர்ந்த சகாதேவன் (44) என்பவருடன் கவிதாவிற்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி, கள்ளக்காதலாக உருவெடுத்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். மனைவியின் இந்த விபரீத பழக்கம் பற்றி அறிந்த கணவர் சக்திவேல், அதிர்ச்சியடைந்து கவிதையைக் கண்டித்துள்ளார். நிறைய அட்வைஸ் தந்துள்ளார்.

    Advertisement

    ஆனாலும் கணவரின் பேச்சைக் கவிதா கேட்கவில்லை.. அத்துடன் கணவர் இப்படி தினமும் அட்வைஸ் தருவதால், கோபித்துக் கொண்டு தனது 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    கணவனை பார்த்ததுமே மனம் மாறிய கவிதா

    கணவனை பிரிந்த கவிதா, கள்ளக்காதலன் சகாதேவனுடன் சேர்ந்து கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த 6 மாதங்களாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கு நடுவீல், மனைவியும் குழந்தைகளும் எங்கே இருக்கிறார்கள் என்று சக்திவேல் அலைந்து திரிந்து தேடி வந்தார். பிறகுதான், சக்திவேலுக்கு, அவர்கள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் தகவல் கிடைத்தது.

    Advertisement

    உடனடியாக சக்திவேல், நேற்று முன்தினம் தன்னுடைய சொந்தக்காரர்களை அழைத்துக் கொண்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கவிதாவிடம், "நடந்தது முடிந்துவிட்டது, பழையதை மறந்துவிட்டு குழந்தைகளுக்காக என்னுடன் குடும்பம் நடத்த வந்துவிடு" என்று கவிதாவை அழைத்துள்ளார். கணவரை பார்த்ததுமே கவிதாவின் மனம் மாற ஆரம்பித்தது.. அவரது பேச்சில் இருந்த நியாயமும் புரிந்தது.. உடனே கணவருடன் செல்லவும் சம்மதித்தார்.

    பிளேடால் அறுத்த கள்ளக்காதலன்

    ஆனால் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலன் சகாதேவன், கவிதாவை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தார். "என்ன விட்டுட்டு போகக் கூடாது" என்று சொல்லி சகாதேவன் மிரட்டினார்.. தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். எதையும் பொருட்படுத்தாத கவிதா, தனது துணிமணிகளையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் கணவருடன் கிளம்பத் தயாரானார்.

    Advertisement

    இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சகாதேவன், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கவிதாவின் கழுத்தை அறுத்துவிட்டார்.. கவிதா அலறித் துடித்த நொடியிலேயே, சகாதேவனும் அதே பிளேடால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்.

    2 பேருமே ஐசியூவில்

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேருமே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.. இதை பார்த்து சக்திவேலும் அவரது உறவினர்களும், குழந்தைகளும் அலறி துடித்து கதறினார்கள்.. உடனடியாக இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இப்போது அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் சகாதேவன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 6 மாதங்களாக கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண், மீண்டும் கணவருடன் செல்ல முயன்றபோது நடந்த இந்த கொடூர சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....!!

    English Summary

    Erode to Kallakurichi Love Affair.. Woman Chooses Husband, 6-Month Lover Takes Shocking Step