அர்த்த ராத்திரியில் தூக்கத்தில் கதவை திறந்த ஈரோடு வினோதினி.. எதிரே கள்ளக்காதலன்.. மறு நொடியே கொடுமை

  • ஈரோடு: ஈரோடு வினோதினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார் அந்த கள்ளக்காதலன்.. ஆனால் கருத்து வேறுபாடால் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டினார் காதலன்.. வினோதியும் அரை தூக்கத்தில் கதவை திறந்துள்ளார்.. அப்போதுதான் இந்த பயங்கரம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    ஈரோடு பாரதி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் சென்னப்பன். இவரது மகள் வினோதினி. 24 வயதான வினோதினிக்கும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 5 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. சூர்யா திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு தனிஷ் என்ற 4 வயது மகன் உள்ளான்.

    Advertisement

    ஈரோடு வினோதினி

    ஆரம்பத்தில் இவர்களின் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றது.. ஆனால், நாளடைவில் 2 பேருக்கும் இடையே மனஸ்தாபம் வெடித்தது... காரணம், வினோதினி எப்ப பார்த்தாலும் செல்போனுடனேயே காணப்பட்டார்..

    எந்நேரமும் செல்போனில் மூழ்கியிருநதது, சூர்யாவுக்கு பிடிக்கவில்லை.. ஆனாலும் வினோதினி செல்போனை விடவில்லை... சூர்யா வேலைக்குச் சென்ற பிறகு, வினோதினி இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டு பலருடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

    இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலன்

    அப்படிப்பட்ட நேரத்தில்தான், வினோதினிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடியைச் சேர்ந்த நவநீதிகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். 26 வயதான நவநீதிகிருஷ்ணன் சிம்கார்டு விற்பனை செய்து வந்தார்.

    Advertisement

    இன்ஸ்டாகிராம் பேச்சாக ஆரம்பித்த இந்த உறவு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் அவ்வப்போது வினோதினியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் கணவர் சூர்யா சூர்யாவுக்கும் இடையே தகராறும் முற்றியது.

    ஒருகட்டத்தில் வினோதினி கணவரைப் பிரிந்து ஈரோட்டிற்கு வந்தார். பெற்றோர் வீட்டின் அருகே ஒரு வாடகை வீட்டில் மகனுடன் தனியாக வசிக்க துவங்கினார்.. வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள ஓர் ஆர்கானிக் கடையில் விற்பனையாளராக வேலையிலும் சேர்ந்தார்.

    நள்ளிரவில் தகராறு

    ஈரோட்டிற்கு வந்த பிறகும் நவநீதிகிருஷ்ணனுடன் முழு நேர தொடர்பில் இருந்து வந்தார். ஆனால், நவநீதிகிருஷ்ணனின் போக்கில் மாற்றம் தெரியவும், வினோதினி அதிர்ச்சி அடைந்தார்.. அதனால் கள்ளக்காதலனிடம் பேசுவதை தவிர்த்தார்..

    Advertisement

    இதனால் ஆத்திரமடைந்த நவநீதிகிருஷ்ணன், வினோதினி வேறு யாரையோ காதலிக்கிறார் என்று சந்தேகப்பட்டு, தினமும் செல்போனில் தகராறு செய்து வந்தார்.. கடந்த சில நாட்களாகவே இவர்களின் சண்டை வலுவடைந்து கொண்டே போனது.

    சம்பவத்தன்று ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி ஈரோட்டிற்கு வந்த நவநீதிகிருஷ்ணன், நள்ளிரவு நேரத்தில் வினோதினியின் வீட்டுக் கதவைத் தட்டினார். தூக்க கலக்கத்தில் வினோதினி கதவைத் திறந்ததும் உள்ளே புகுந்த அவர், "ஏன் என்னிடம் பேச மாட்டேன்கிறாய்?" என்று மிரட்டும் தொனியில் தகராறு செய்தார்.

    பரிதாபம் வினோதினி

    அதற்கு வினோதினி, "உன்னிடம் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை, உடனடியாக வீட்டை விட்டு வெளியே போ" என்று கறாராக சொல்லி உள்ளார்.. இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே போன நவநீதிகிருஷ்ணன், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து வினோதினி மீது ஊற்றி தீ வைத்தார்.

    Advertisement

    தீ உடலில் பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்த வினோதினி பக்கத்திலிருந்த நவநீதகிருஷ்ணனையும் இறுக பிடித்து கொண்டார்.. இதனால் நவநீதகிருஷ்ணன் உடம்பிலும் தீ பிடித்தது.. தீக்காயங்களும் ஏற்பட்டன.. ஆனால், பயத்தில் அங்கிருந்து அலறி தப்பி ஓடிவிட்டார்..

    விரைவில் ஜெயில்

    இதனிடையே வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலுள்ள அவரது பெற்றோர், அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோதினியை அவரது சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆனால், வினோதினி நேற்று பரிதாபமாக இறந்துவிட்டார்..

    இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மற்றொரு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது அவரை கைது செய்தனர்.. ஆனால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுமே, கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைப்போம் என்கிறார்கள் போலீசார்.. நவநீதகிருஷ்ணனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை நடக்கிறது.. போலீசாரும் அவரை அருகிலிருந்து கண்காணித்து வருகிறார்கள்.

    English Summary

    Erode Woman Opens Door Half-Asleep... What Her Instagram Friend Did Next Will Leave You Speechless