ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிருக்கேனா.. அமைச்சர் விஜய் பாலாஜி பரபரப்பு விளக்கம்

  • ஈரோடு: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. குறிப்பிடத்தக்க சில திட்டங்கள் அறிவித்தாலும், முதலமைச்சர் தவெக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் விஜய் பாலாஜி ரேஞ்ச் ரோவர் கார் வாங்கியிருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விஜய் பாலாஜியே விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    ஈரோட்டில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, "எனக்கு அவன் பேசினது கூட பரவாயில்லை. அதை எனக்கே வாட்ஸ் அப் செய்கிறார்கள். ரேஞ்ச் ரோவர் கார் வாங்கி மாட்டு கொட்டகையில் நிறுத்தி வெச்சிருக்கேனமா. அதையும் சொல்லிட்டு அவரே, ஆண்டுக்கு 10 ரேஞ்ச் ரோவர் கார் தான் விற்கும். அதை யார் வாங்கியுள்ளார்கள் என்று பார்த்தாலே அமைச்சர் சிக்கிவிடுவார் என்றும் அவர்களே சொல்கிறார்கள். அவர் சொல்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை.

    Advertisement

    ரேஞ்ச் ரோவர் கார்

    அவர் சொல்வது போல எங்காவது மாட்டு கொட்டகையில் ரேஞ்ச் ரோவர் கார் நின்றிருந்தால், தவெக பெயரை சொல்லி சந்தோஷமாக ஊர் முழுவதும் ரவுண்டு அடித்துவிட்டு வாங்க. அதேமாதிரி பெரிய கனவுடன் நானும், சகோதரர் ஆனந்த் மோகனும் சட்டமன்றத்திற்குள் சென்றோம். அங்கே ஆளுமை மிக்க தலைவர்களை எல்லாம் பார்த்தோம். மிகவும் சந்தோஷமாக பெருமையாக இருந்தது. தலைவர் எங்களுக்கு பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளார்.

    நிச்சயமாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அத்தனை நல்லதை செய்கிற எண்ணம் உருவானது. டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்தவர்களை இன்றைக்கு சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்க வைத்தது நம் தலைவர் தான். இதுவே பெரிய மாற்றம் தான். சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இந்த ஒரு வருடத்திற்கான சிறப்பு திட்டங்களை மக்களுக்காக அரசாங்கம் கொண்டு வருகிறது.

    Advertisement

    தவறை சுட்டிக்காட்டினால்

    மானிய கோரிக்கையில் மக்களுக்கு என்ன தேவையோ, இது சரி.. இது தவறு என்று சுட்டி காட்டினால் உதவியாக இருக்கும். இதை செய்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். இதை செய்தால் மக்களுக்கு பாதிப்பு என்று கூறினால் நாம் நிச்சயமாக ஏற்போம். எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான என்ன சொன்னாலும், அது மக்களுக்கு பயனளிக்கிற விஷயமாக இருந்தால் ஏற்போம் என்று நம் முதலமைச்சர் எல்லார் முன்பும் பகிரங்கமாக கூறியுள்ளார்.

    நம் முதலமைச்சர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து கருத்தை கேட்கிறார். சொன்னதற்கு பிறகும் அவர்கள் கேட்பதில்லை. சட்டமன்றத்தில் 25 நிமிடங்கள் பேசினால், ஒரு நிமிடம் தான் மக்களுக்காக பேசுகிறார்கள். மீதி 24 நிமிடங்களும் அவர்கள் கட்சி தலைவரை துதிபாடி கொண்டிருக்கிறார்கள். 75 ஆண்டுகளாக நீங்கள் தான் ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் தான் செய்தாக வேண்டும். அத்திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பது தான் எங்களின் கேள்வி" என்றார்.

    English Summary

    TVK Minister Vijay Balaji said, Some people saying I bought Range rover car. If any one found that can take for ride.