திம்பம் மலைப் பாதையில் ஹாயாக உலா வந்த சிறுத்தை.. நடுரோட்டில் தரிசனம் கொடுத்ததால் வாகன ஓட்டிகள் ஷாக்

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், திம்பம் மலைப் பாதையில் விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், மலைப் பாதையில் சுற்றித் திரிந்த சிறுத்தையின் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    Advertisement

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான், யானை, கரடி, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது, வனப்பகுதியை விட்டு வெளியேறும் வன விலங்குகள் சாலையில் உலா வருவது வழக்கம். தற்போது, இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திம்பம் மலைப் பாதையில் சிறுத்தைகள் அதிக அளவில் நடமாடி வருகின்றன.

    Advertisement

    சுற்றித் திரிந்த சிறுத்தை

    இந்நிலையில், திம்பம் மலைப் பாதை 26 ஆவது கொண்டை ஊசி வளைவில் வனப் பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் ஒய்யாரமாக நடமாடிக் கொண்டிருந்தது. இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    வைரல் வீடியோ

    இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வரும் நிலையில், இரவு நேரங்களில் வாகனங்களில் பயணம் செய்வோர் வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது என்றும், வன விலங்குகளைத் தொந்தரவு செய்யும் வகையில் புகைப்படமோ, வீடியோ காட்சிகளோ எடுக்க கூடாது என்றும் வனத் துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    English Summary

    Sathyamangalam Tiger Reserve is home to a large number of wild animals. With animal activity on the rise along the Thimbam mountain pass, motorists have been left alarmed by the sight of a leopard roaming the area.