ஈரோடு: பெருந்துறை நர்ஸ் விவகாரம் இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஈரோட்டில் இப்போது மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறை நாளில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு, அடுத்து எடுத்த திருப்பம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் என்ன நடந்தது? தொடர்ந்து பார்ப்போம்..!!
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகேயுள்ள காரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - ராஜேஸ்வரி தம்பதி. ராஜேஸ்வரிக்கு 38 வயது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
குடும்பத்தை நடத்துவதற்காக நாகராஜ் தறி பட்டறையில் நெசவாளராகவும், ராஜேஸ்வரி பிரின்டிங் பட்டறையிலும் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆயுத பூஜை விடுமுறை நாளில் கணவன், மனைவி 2 பேரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ராஜேஸ்வரியின் தலை, கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் ராஜேஸ்வரி படுகாயங்களுடன் உயிரிழந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு இப்படி ஒரு விபரீதத்தில் முடியும் என்று அந்த பகுதியினர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனைவி உயிரிழந்த பிறகு நாகராஜுக்கு பயம் அதிகமாகிவிட்டது.. ராஜேஸ்வரியின் மரணத்தை ஏதோ உடல்நலக்குறைவால் ஏற்பட்ட இயற்கை மரணம் போலக் காட்டி, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலைக்குள் யாருக்கும் தெரியாமல் ராஜேஸ்வரியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை கிடுகிடுவென செய்தார்.. ஆனால், ராஜேஸ்வரியின் மரணம் தொடர்பாக தகவல் வெளியானதால் போலீசாருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது.. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சித்தோடு போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நாகராஜை கைது செய்த போலீசார், அவரை சித்தோடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேஸ்வரியை நாகராஜ் மட்டும்தான் தாக்கினாரா அல்லது வேறு யாருக்காவது இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு மகனும் மகளும் இருக்கும் நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு ஒரு உயிரைப் பறித்திருக்கிறது. அத்துடன் நடந்த சம்பவத்தை மறைத்து உடலை அடக்கம் செய்ய முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும் இந்த வழக்கில் கவனம் பெற்றுள்ளது. ஆயுத பூஜை நாளில் ஈரோடு அருகே இப்படியொரு கொடூரம் நடந்துள்ள அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.. இன்னும் பெருந்துறை நர்ஸ் விவகாரத்தின் பரபரப்பே அடங்காத நிலையில், அடுத்த அதிர்ச்சி இதே மாவட்டத்தில் எற்பட்டுள்ளது...!!ஆயுத பூஜை நாளில் தகராறு
நர்ஸ் கொலை.. சுள்ளான் மதன் கொலை.. குழந்தைகள் கடத்தல்! தவெக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு?
நாகராஜ் செய்த காரியம்
நர்ஸ் கொலையில் மருத்துவமனை ஊழியர் கைதானது எப்படி? காட்டி கொடுத்த துண்டு சீட்டு! அதில் இருந்தது என்ன?
பெருந்துறை நர்ஸ்