பெருந்துறைக்கு விஜய் இன்று விசிட்.. 13 மாவட்ட மகளிருக்கு ரூ.1,110 கோடி.. ஈரோட்டில் என்ன நடக்கிறது?

  • ஈரோடு: தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தருகிறார். 13 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதையடுத்து, இன்று ஈரோடு மாவட்டத்துக்கு வருகிறார்.

    Advertisement

    ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 4,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்குகிறார்.

    Advertisement

    பெருந்துறை அருகே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.

    பெருந்துறை விஜய்

    முன்னதாக, பெருந்துறை அருகிலுள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு மேடை அமைக்கும் பணிகள், ஹெலிபேடு அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அமைச்சர்கள், கலெக்டர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர்.

    ஆனால், நேற்றைய தினம் திடீரென இந்த இடம் மாற்றப்பட்டது. பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி, காஞ்சிக்கோவில் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் புதிய இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

    Advertisement

    நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டாலும், முதலமைச்சரின் ரோடு ஷோவில் எந்த மாற்றமும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். முதல்வர் வருகையை முன்னிட்டு 4500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் வங்கிக் கடனுதவி உள்ளிட்ட உதவிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் ரூ.1,110 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சுமார் 5,000 பயனாளிகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெற போகிறார்கள்.. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறவும், தங்களது தொழில்களை விரிவுபடுத்தவும் உதவும் வகையில் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன.

    இதனை தவிர, ஈரோடு மாவட்டத்தில் முடிவடைந்துள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்...இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாவும் நடைபெற உள்ளது.

    செங்கோட்டையன் நச் பதில்

    இதனிடையே, பெருந்துறையில் விஜய் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி இடைத்தேர்தலை மனதில் வைத்து நடத்தப்படுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.. இதனை செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் நேற்று கேட்டனர்..

    Advertisement

    அதற்கு செங்கோட்டையன், "முதலமைச்சர் விஜய் பெருந்துறைக்கு வருவது இடைத்தேர்தலுக்காக கிடையாது, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மகளிரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் 13 மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.. முதலமைச்சர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் அவரை காண வருவார்கள், முதலமைச்சர் வருகையே ஒரு ரோடு ஷோ போலத்தான்" என்றார் செங்கோட்டையன்.

    English Summary

    Perundurai Vijay Visit Today: Rs 1,110 Crore Benefits for Women in 13 Districts, What's Happening in Erode?