சத்தியமங்கலம் அருகே வாழைத் தோட்டத்தில் நெளிந்த உருவம்! அலறி அடித்த விவசாயிகள்! ஆத்தி எத்ததண்டி!

  • ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வாழைத் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியை ஒட்டியுள்ள புதுப்பீர்கடவு பகுதியில் ஏராளமான விவசாயத் தோட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் கரும்பு, மல்லிகைப்பூ , வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், புதுப்பீர்கடவு பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வாழை மரங்களுக்கு இடையே வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, வாழை மரங்களுக்கு இடையே பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு தொழிலாளி ஒருவர் பாம்பு பாம்பு என அலறியுள்ளார். சப்தம் கேட்டு அங்குச் சென்ற தொழிலாளர்கள் மலை பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இது குறித்து தோட்ட உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து பத்திரமாக மீட்டனர்.

    Advertisement

    பின்னர், மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.

    English Summary

    Python rescued from Banana plantation near Sathyamangalam. Forest department leave the giant in dense forest area.