ஈரோட்டில் கொடூரம்! சுடுகாட்டில் இடம் மறுப்பு.. காலில் விழுந்து கெஞ்சிய தலித் மக்கள்! விஜய் மௌனம்!

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுடுகாட்டில் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், இருவர் காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது பெரும்பள்ளியில்?

    ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு அருகில் உள்ள மாத்துப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது பெரும்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் (SC) வசித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக அங்குள்ள பொது சுடுகாட்டில் இவர்கள் சடலங்களை அடக்கம் செய்ய பிற சமுதாயத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திங்களூர் பகுதிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்த மக்கள் இருந்தனர்.

    Advertisement

    இந்தப் பிரச்சினை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட சுடுகாடு அனைவருக்கும் பொதுவானது என்று பெருந்துறை வட்டாட்சியர் (தாசில்தார்) முன்பு அறிவித்திருந்தார்.

    முதியவர் மறைவு

    கடந்த அக்டோபர் 5 அன்று, அதே ஊரைச் சேர்ந்த 90 வயதான சென்னி என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை கிராமத்தில் உள்ள பொது சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய குடும்பத்தினரும் உறவினர்களும் முயன்றனர். ஆனால், அங்கு மற்றொரு பிரிவினர் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாகத் தெரிகிறது.

    Advertisement

    இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, "இங்கே அடக்கம் செய்தால் ஊருக்குள் உங்களுக்கு எந்த வேலையும் தரமாட்டோம்" என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் வேலை பறிபோய் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று பயந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இருவர், வேறு வழியின்றி அங்கிருந்தவர்களின் காலில் விழுந்து கெஞ்சினர். இறுதியில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் முதியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    வழக்குப் பதிவு: தீவிர விசாரணை

    இருவர் காலில் விழுந்து கெஞ்சும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியது. மனிதநேயமற்ற இந்தச் செயல் பொதுமக்களிடையேயும் பல்வேறு அமைப்புகளிடையேயும் கடும் கண்டனத்தை எழுப்பியது.

    Advertisement
    உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்டை படிக்க மறுக்கும் முதல்வர் விஜய்? கோட்டையில் வெடிக்கும் அதிகார மோதல்?

    இதையடுத்து, பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் திங்களூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    எழுந்துள்ள கண்டனக் குரல்கள்

    அனைவருக்கும் பொதுவான சுடுகாட்டைப் பயன்படுத்த மறுப்பதும், வேலை தரமாட்டோம் என மிரட்டி காலில் விழ வைப்பதும் கடுமையான தீண்டாமை அடக்குமுறை என்று பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    Advertisement

    சம்பவம் நடந்த இடத்தில் அதிகாரிகள் இருந்தும் இந்த அவமானத்தை ஏன் தடுக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இடைத்தேர்தலில் வென்றும் சோகத்தில் விஜய்? துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக? அமைதி காக்கும் முதல்வர்!

    விஜய் மௌனம்

    ஈரோடு மாவட்டம் பெரும்பள்ளியில் பொது சுடுகாட்டில் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து, தலித் மக்கள் காலில் விழ வைக்கப்பட்ட அவலம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் முன்னிலையிலேயே மனிதநேயமற்ற இந்தத் தீண்டாமைக் கொடுமை அரங்கேறியுள்ளதாக சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் கொந்தளித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வருவது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

    Advertisement

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உடனடியாகக் குரல் கொடுக்காமலும், தவறிழைத்தவர்கள் மற்றும் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிடாமலும் அமைதி காப்பது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    English Summary

    Shock in Erode: Caste Row Over Burial Ground Leaves SC Men Pleading; Viral Video Sparks Outrage